ADDED : பிப் 18, 2024 01:10 AM
மாசிமகம் திருவிழா -4ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, வெள்ளி சிம்மாசனத்தில் அம்மன், சுவாமி வீதி உலா, காலை 10:00 மணி, மாலை 6:00 மணி.
மாசித் திருவிழா: இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மேலமாசி வீதி, மதுரை, 4ம் நாள் உற்ஸவம், காலை 10:00 மணி, சுவாமி வீதி உலா, மாலை 6:00 மணி.
பாராயணம், வழிபாடு: சத்குரு ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலி, சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி.
விவாஹ யாகம்: கோதண்டராமர் கோயில் அருகிலுள்ள அரங்கு, அக்ரஹாரம், பழங்காநத்தம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமண சமாஜம் வீர வாஞ்சிநாதன் கிளை, காலை 7:00 மணி.
யாகசாலை பூஜை: சித்தி விநாயகர் கோயில், தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 6ம் அணி வளாகம், ரிசர்வ்லைன், மதுரை, காலை 9:00 மணி.
மாசி மகம் திருவிழா - 5ம் நாள்: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, ஏகாந்த சேவை, காலை 9:00 மணி, சேஷ வாகனம் வைகுண்டநாதர் சேவை, இரவு 7:00 மணி.
ராதாமாதவ கல்யாண மகோத்ஸவம்: சத்சங்கம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, தோடயமங்களம் அஷ்டபதி பாடல்கள், காலை 8:30 மணி, ஆஞ்சநேய உற்ஸவம், மதியம் 1:15 மணி.
கல்விநல மேம்பாட்டிற்காக தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவர், சரஸ்வதி யாகம்: ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி, தெற்கு சித்திரை வீதி, மதுரை, ஏற்பாடு: ராஜராஜேஸ்வரி ஆன்மிக இலக்கிய மன்றம், காலை 8:55 மணி.
ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
கம்பர் காட்டும் பரம்பொருள்: நிகழ்த்துபவர் - சாந்திகுமாரசாமி, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
கீதை பாராயணம், திருக்குறள்: நிகழ்த்துவோர் - சிவானந்த சுந்தரானந்தா, கிேஷார்குமார், தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
பொது
விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல்: யாதவா பெண்கள் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: அமைச்சர் உதயநிதி, மதியம் 2:30 மணி.
பைந்தமிழ் இலக்கியப் பேரவை முப்பெரும் விழா: நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லுாரி வளாகம், மதுரை, தலைமை: செயலாளர் மாரியப்ப முரளி, காலை 9:00 மணி.
தடகளம் சம்பந்தமான தபால் தலைகள் சேகரிப்பு - கருத்தரங்கு: சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி, காமராஜர் சாலை, மதுரை, ஏற்பாடு: தபால்தலைகள் மற்றும் நாணயங்கள் சேகரிப்போர் சங்கம், தலைமை: ராஜேஷ்குமார், காலை 11:00 மணி.
யாதவா வரன்கள் பெற்றோர் சந்திப்புகூட்டம்: யாதவர் பண்பாட்டுக் கழக திருமண மண்டபம், சர்வேயர் காலனி, மதுரை, தலைமை: தலைவர் கண்ணன், காலை 10:00 மணி.
லோக்சபா தேர்தல் ஆலோசனைக் கூட்டம்: பாபு சங்கர் மகால், குரு தியேட்டர் அருகில், மதுரை, தலைமை: மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் முருகபாண்டி, ஏற்பாடு: தமிழக ஐக்கிய ஜனதா தளம், காலை 10:00 மணி.
உற்பத்தித் திறன் வார விழா: உற்பத்தித் திறன் கவுன்சில் அரங்கு, மகபூப்பாளையம், மதுரை, பங்கேற்பு: ரைஸ் அட்வர்டைசிங் இயக்குநர் கிறிஸ்டோபர் ஞானராஜ், மாலை 6:30 மணி.
நண்பர்களின் சங்கமம்: கே.பி.ஆர்.,மகால், ஹார்விநகர் 2 வது குறுக்குத் தெரு, அரசரடி, மதுரை, ஏற்பாடு: தேசிய சமூக சேவா அறக்கட்டளை, தலைமை: லண்டன் தமிழ்ச் சங்கம் இயக்குநர் முருகேசன், மாலை 6:30 மணி.
பறவைகள் கணக்கிடும் பணி: அமெரிக்கன் கல்லுாரி வளாகம், மதுரை, ஏற்பாடு: விலக்கியல் துறை, மாலை 4:00 மணி.
மதுரை சங்கமம் நம்ம ஊரு திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மண்டல கலை பண்பாட்டு மையம், தலைமை: உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், காலை 10:00 மணி.
உங்களால் முடியும்-தன்னம்பிக்கை கருத்தரங்கு: யூனியன் கிளப், காந்தி மியூசியம் அருகில், மதுரை, ஏற்பாடு: ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம், தலைமை: எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், மாலை 6:30 மணி.
போக்குவரத்து போலீசாருக்கு இரு சக்கர ரோந்து வாகனங்கள் துவக்கம்: போலீஸ் கமிஷனர் அலுவலகம், அழகர்கோவில் ரோடு, மதுரை, பங்கேற்பு: டி.ஜி.பி.,சங்கர் ஜூவால், மதியம் 3:00 மணி.
மகிழ்ச்சி நல்வாழ்வு பயிற்சி மையம் துவக்க விழா: ஆஹானா மருத்துவமனை, கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: தென்மண்டல காவல்துறை, எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம், மதியம் 3:30 மணி; மகிழ்ச்சி திட்டம் துவக்க விழா: தியாகராஜர் கலை அறிவியல் கல்லுாரி, தெப்பக்குளம், பங்கேற்பு: டி.ஜி.பி.,சங்கர் ஜூவால், மனநல மூத்த மருத்துவ ஆலோசகர் ராமசுப்பிரமணியன், மாலை 4:00 மணி.
என்.எஸ்.எஸ்., முகாம்
'பெரிதினும் பெரிதுகேள்'-கருத்தரங்கு: உச்சப்பட்டி, காந்திநகர், திருமங்கலம், ஏற்பாடு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, தலைமை: பேராசிரியர் நவீன் நாயக், மாலை 4:00 மணி; களப்பணி, காலை 9:00 மணி.
களப்பணி: தச்சம்பத்து, ரிஷபம், மேலக்கால், திருவேடகம், ஏற்பாடு: விவேகானந்த கல்லுாரி, காலை 9:00 மணி.
மருத்துவ முகாம்
டாக்டர் நாகராஜன் நினைவாக சர்க்கரை, ரத்த அழுத்தம் இலவச பரிசோதனை முகாம்: வி.என்.நியூரோ மருத்துவமனை, வக்கீல் புதுத்தெரு, மதுரை, ஏற்பாடு: லினெக்ஸ் நிறுவனம், காலை 11:00 மணி.