ADDED : ஜன 02, 2025 05:21 AM
கோயில்
திரு அத்யயன உற்ஸவம் - பகல்பத்து: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 9:30 மணி.
திரு அத்யயன உற்ஸவம் - பகல்பத்து: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், தேனி ஆனந்த நாட்டியாலயா குழுவின் பரதநாட்டியம், காலை 9:30 மணி முதல்.
திரு அத்யயன உற்ஸவம் - பகல்பத்து: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், பெருமாள் புறப்பாடு, நாச்சியார் திருமொழி தொடக்கம், காலை 9:00 மணி.
விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, அதிகாலை 4:30 மணி முதல்.
கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கரமடம், சொக்கிகுளம், மதுரை, மாலை 5:30 மணி.
குரு வாரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவர் விக்ரஹத்திற்கு சிறப்பு பூஜை: மகா பெரியவர் கோயில், 13 பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரஹ நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, தலைமை: செஞ்சு லட்சுமி, முன்னிலை: சங்கர் லால், காலை 7:30 மணி, திருப்பாவை தொடர் உபன்யாசம்: நிகழ்த்துபவர் - பேராசிரியர் துர்காதேவி, காலை 11:00 மணி.
திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, காலை 6:30 மணி.
விஷ்ணு சகஸ்ரநாமம், திருப்பாவை பாராயணம்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீஹரி பக்த சமாஜம், காலை 6:00 மணி, திருப்பாவை: நிகழ்த்துபவர் - ஆசிரியை சுஜாதா, ஏற்பாடு: ஸ்ரீபூ கல்சுரல் அகாடமி, மாலை 6:00 மணி.
திருப்பாவை: நிகழ்த்துபவர் - பேராசிரியர் ஜகந்நாத் ராமானுஜ தாஸர், கூடலழகர் பெருமாளர் கோயில், மதுரை, காலை 6:30 மணி.
நாம சங்கீர்த்தனம் பாராயணம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 5:30 மணி.
விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்த மூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: இளம் பிராமணர் சங்கம், மாலை 5:00 மணி.
விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு: நிகழ்த்துபவர் - ஓம் சக்தி நடேசன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
பெற்றோர், ஆசிரியர் கலந்துரையாடல்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, ஏற்பாடு: வணிக மேலாண்மைத் துறை, காலை 8:30 மணி.
பெற்றோர் கூட்டம்: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் வெங்கடேசன், காலை 10:00 மணி.
கை கழுவும் நிலையம் திறப்பு: அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லுாரி, மதுரை, முன்னிலை: முதல்வர் அமுதா, திறந்து வைப்பவர்: ரோட்டரி கவர்னர் ராஜா கோவிந்தசாமி, பங்கேற்பு: சங்கத் தலைவர் வாசுதேவன், செயலாளர் பாலசுப்பிரமணியன், ஆடிட்டர் சேதுமாதவா, ஏற்பாடு: மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கம், காலை 10:00 மணி.
பொது
பிரதமரின் கிராமப்புற ரோடுகள் திட்டம் குறித்த பயிற்சி பட்டறை: ஓட்டல் மேரியட், அழகர்கோவில் ரோடு, மதுரை, பங்கேற்பு: ஊரக வளர்ச்சித்துறை ஒன்றிய அதிகாரிகள், மத்திய,மாநில அரசு அதிகாரிகள், ஏற்பாடு: ஊரக வளர்ச்சித்துறை, காலை 10:00 மணி.
பண்டைய கொரிய, தமிழக உறவுகள், தொல்லியல், இலக்கிய ஒப்பீட்டாய்வு - தமிழ்க்கூடல்: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: இயக்குநர் அவ்வை அருள், சிறப்புரை: தென்கொரிய சேஜோங் பல்கலை உதவிப் பேராசிரியர் ஆரோக்கியராஜ், காலை 10:30 மணி.
வடக்கு கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மண்டல அலுவலகம், ரேஸ்கோர்ஸ், மதுரை, தலைமை: மேற்பார்வை பொறியாளர், காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
அரசின் மகளிர் சிறப்பு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம்: சமுதாய கூடம், நாகமலை, தலைமை: கல்லுாரி முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: தாசில்தார் செந்தாமரை வள்ளி, ஏற்பாடு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி ஆங்கிலத்துறை, காலை 11:30 மணி.
ஹிந்தி பேச்சு பயிற்சி: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்றுவிப்பவர்:  காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முகூர்த்தகால் நடும் விழா: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடக்கும் இடம், தலைமை: அமைச்சர் மூர்த்தி, பங்கேற்பு: கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், காலை 10:30 மணி.
கண்காட்சி
காட்டன் துணிகள், கைத்தறி ஆடைகள் கண்காட்சி, விற்பனை: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.

