ADDED : செப் 27, 2025 04:22 AM
நவராத்திரி விழா 5ம் நாள் ரசவாதம் செய்த படலம் அலங்காரம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி, அன்னை மீனாட்சி அருளாட்சி என்ற தலைப்பில் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - உதவி பேராசிரியை புனிதா, மாலை 6:30 மணி, கலை விழா, காலை 8:00 மணி முதல்.
கள்ளழகர் கோயில், அழகர்கோவில், உட்பிரகாரங்களில் சிறப்பு அலங்காரத்தில் கல்யாண சுந்தரவள்ளித் தாயார் உற்ஸவ புறப்பாடு, மாலை 6:00 மணி, கலை நிகழ்ச்சிகள், காலை 9:30 மணி முதல்.
கூடலழகர் கோயில், மதுரை, உட்பிரகாரங்களில் சிறப்பு அலங்காரத்தில் மதுரவள்ளித் தாயார் உற்ஸவ புறப்பாடு, கொடிமர மண்டபம் முன் வைக்கப்பட்டுள்ள கொலுவிற்கு சிறப்பு பூஜை, கலை நிகழ்ச்சிகள், மாலை 5:00 மணி.
மகிஷாசூரமர்த்தினி அலங்காரம்: திரவுபதி அம்மன் கோயில், தெற்கு மாரட் வீதி, மதுரை, சிறப்பு பூஜை, இரவு 7:00 மணி.
வெங்கடடேச பெருமாள் அலங்காரம்: சக்தி சந்நியாசி சுவாமி கோயில், புது ராமநாதபுரம் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.
அன்னபூரணி அலங்காரம்: மகா துர்க்கையம்மன் கோயில், சிலைமான், புளியங்குளம், மதுரை, கொலு மண்டபத்தில் அம்மனுக்கு சோடஸ உபசார பூஜை, தீபாராதனை, இரவு 7:00 மணி, பிரசாதம் வழங்குதல், இரவு 8:00 மணி.
ஆண்டாள் அலங்காரம்: நவநீத கிருஷ்ணன் கோயில், பால்மால் குறுக்குத்தெரு, மகால் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி முதல்.
அன்னபூரணி அம்மன் அலங்காரம்: பொன்முனியாண்டி சுவாமி கோயில், பொன்மேனி, தமிழ் சிவாவின் சொற்பொழிவு, மாலை 6:30 மணி.
சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, பெரியநாயகி அம்பாளுக்கு விஷேச அபிஷேகம், தீபாராதனை, காலை 10:00 மணி, சிறப்பு அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:00 மணி, இன்னிசைக் கச்சேரி: நிகழ்த்துபவர்கள் - நாகராஜ பாகவதர் சிஷ்யைகள், கீதாபாரதி குழுவினர், இரவு 7:00 மணி.
சக்தி விநாயகர் கோயில், கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகம், மதுரை, கொலு வைத்தல், சிறப்பு பூஜை, காலை 10:00 மணி.
வெண்ணெய்தாழி கண்ணன் அலங்காரம்: தாஷ்டீக பாலகுருநாத அங்காளபரமேஸ்வரி கோயில், வடக்குமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி, சிறப்பு பூஜை, இரவு 8:00 மணி.
மகாலட்சுமி அலங்காரம்: கற்பக விநாயகர் கோயில், கே.கே.நகர், மதுரை, மாலை 6:00 மணி.
மாயாபஜார்-கடோத்ஜகன், வத்ஸலாவின் திருமணத்திற்கு வந்து உணவு உண்ணுதல் அலங்காரம்: திரவுபதி அம்பாள் கோயில், 156, தெற்கு மாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.
அம்பாள் ஊஞ்சல் அலங்காரம்: தேவி முத்தாலம்மன் கோயில், கீழமாரட் வீதி, மதுரை, காமேஸ்வரி மகளிர் மன்றத்தின் நிகழ்ச்சி, மாலை 6:00 மணி.
மதுரை நகரத்தார் விடுதியில் சுவாமிக்கு மகாலட்சுமி அலங்காரம், ஆராதனை, வடக்கு சித்திரை வீதி, மதுரை, ஏற்பாடு: நகரத்தார் விஜயதசமி விழாக்குழு, மாலை 6:00 மணி.
தபசு காட்சி அலங்காரம்: விசாலாட்சி காசி விஸ்வநாதர் கோயில், தெற்காவணி மூல வீதி, மாலை 6:00 மணி.
அறுபத்து மூவர் குருபூஜை மடம், அம்மன் சன்னதி தெரு, மதுரை, கொலு வைத்தல், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், விளக்கு வழிபாடு, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், லட்சார்ச்சணை, கூட்டு வழிபாடு, ஏற்பாடு: திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, மாலை 5:00 மணி.
பரமபதநாதர் அவங்காரம்: உச்சினி மாகாளியம்மன் கோயில், நேதாஜி ரோடு, மதுரை, மாலை 6:00 மணி முதல், நவராத்திரி விசேஷ பூஜைகள், இரவு 10:00 மணிக்கு மேல்.
சீதளா தேவி அலங்காரம்: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி தெரு, மதுரை, தங்ககவசத்தில் கஜலட்சுமி அலங்காரம்: சிருங்கேரி மடம், பைபாஸ் ரோடு, மதுரை, லலிதா சகஸ்ரநாம பாராயணம், சுவாசினி பூஜை, காலை 8:00 மணி, மாலை 5:00 மணி முதல்.
ராஜராஜேஸ்வரி அலங்காரம்: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, காஞ்சி காமகோடி பீடம் முள்ளிப்பள்ளம் கிளை, கோ பூஜை, காலை 9:00 மணி, காமாட்சி அம்பாளுக்கு லலிதா சகஸ்ரநாம பாராயணம், சுவாசினி பூஜை, கன்யா பூஜை, பிரசாதம் வழங்குதல், மாலை 6:00 மணி.
ஜெயந்தி நவராத்திரி உற்ஸவம்: நவநீத கண்ணன் சன்னதி, கீழமாரட் செட்டிய தெரு, மதுரை, சாலிகிராமம் முக்தி நாராயணன் பெருமாள் அவதாரம், மாலை 6:00 மணி.
ஜெயந்தி உற்ஸவம்: ராமசுவாமி நவநீத கிருஷ்ணசுவாமி கோயில், ராமாயணச் சாவடி தெரு, வடக்கு மாசி வீதி, மதுரை, வேணுகோபாலன், செம்பியன் கிணற்றுத்தெரு சாவடி, காலை 8:00 மணி, தவழ்ந்த கிருஷ்ணன் அலங்காரம், மாலை 4:00 மணி, புஷ்ப சப்பரத்தில் ராஜாங்கம் தமிழ் யாதவ மீன்காரத்தெரு வழியாக நான்கு மாசி வீதி உலா, இரவு 8:00 மணி.
ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, பஜனை, ஸ்ரீதேவி மஹாத்மியம் பாராயணம், ஆரத்தி, புஷ்பாஞ்சலி, காலை 8:30 மணி, நவராத்திரி நாயகி சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - சுவாமி அர்க்கபிரபானந்தர், மாலை 5:30 மணி, சிறப்பு பஜனை, இரவு 7:00 மணி, கடஸ்தாபனம், இரவு 7:30 மணி.
சின்மயா மிஷன், டோக் நகர், மதுரை, லலிதா சஹஸ்ரநாம பூஜை, காலை 6:30 மணி, மதுரை நிருத்திய நாட்டியாலயாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி, ஏற்பாடு: சின்மய தேவி குழு, மாலை 6:30 மணி.
கோயில் 14ம் ஆண்டு உற்ஸவ பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா: ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீகல்யாண ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில், பிரசன்னா காலனி, அவனியாபுரம், மதுரை, பெருமாள் கோயிலில் இருந்து பைபாஸ் ரோடு வழியாக வீதியுலா செல்லுதல், மாலை 4:30 மணிக்கு மேல்.
அனுஷ வைபவம் முன்னிட்டு சிறப்பு பூஜை: எஸ்.எம்.கே.திருமண மண்டபம், 12, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, விக்ரகம் மற்றும் வெள்ளிப்பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி, தீபாராதனை, இசைநிகழ்ச்சி: பாட்டு - ரங்கநாயகி, வயலின் - சச்சிதானந்தன், மிருதங்கம் - தியாகராஜன், ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 மணி.
கருட சேவை வீதி புறப்பாடு: பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயில், சவுராஷ்டிரா கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, கருட சேவை, காலை 9:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு தாயுமானவர் பாடல்கள்: நிகழ்த்துபவர் - கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் -- பிரசிதானந்தா சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 7:00 மணி முதல்.
நவராத்திரி சிறப்பு வழிபாடு: லலிதா சகஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர்கள் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 6:00 மணி.
சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் நடத்தும் சந்தை விற்பனை திருவிழா: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, முன்னிலை: கல்லுாரி இயக்குநர் சுப்பிரமணியன், சிறப்பு விருந்தினர்: ஜே.கே.புட்ஸ் நிறுவனர் கணேஷ், காலை 10:30 மணி.
26வது பட்டமளிப்பு விழா: சேது பொறியியல் கல்லுாரி, புல்லுார், காரியாபட்டி, தலைமை விருந்தினர்: உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன், கவுரவ விருந்தினர்கள்: ஆசிய பசிபிக் பகுதிக்கான கே.எஸ்.ஐ., நிறுவன துணைத்தலைவர் முகம்மது இக்பால் ராவுத்தர், கல்லுாரி நிறுவனர் முகம்மது ஜலீல், காலை 10:00 மணி.
சிறுவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்: லிட்டில் சேம்பியன்ஸ் மழலையர் பள்ளி, பொன்மேனி, மதுரை, ஏற்பாடு: பள்ளி நிர்வாகம், ரியோ மருத்துவமனை, காலை 10:00 முதல் மதியம் 12:30 மணி வரை.
என்.எஸ்.எஸ்., முகாம் கோவில்பாப்பாகுடி, கிராம தெருக்கள், பஞ்., அலுவலக வளாகம் சுத்தம் செய்தல், காலை 9:00 மணி, குழந்தைகளின் உரிமைகளும், பாதுகாப்பு சட்டங்களும்: கருத்தாளர் - இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் பாண்டியராஜா, ஏற்பாடு: அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாலை 3:00 மணி.
அரசு உயர்நிலைப்பள்ளி, கொடிமங்கலம், உடற்பயிற்சி, காலை 7:00 மணி, மருத்துவமனை, ரேஷன் கடை சுத்தம் செய்தல், காலை 9:30 மணி, இன்றைய தேவை குறித்த விழிப்புணர்வு, சிறப்புரை: உதவி தலைமையாசிரியர் வேங்கடசுப்ரமணியன், ஆசிரியர் விக்னேஸ்வரன், மதியம் 2:30 மணி, நீர் மேலாண்மை குறித்த கலந்துரையாடல், சிறப்புரை: ஆசிரியர் மகேஸ்வரன், ஏற்பாடு: மதுரைக் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி, இரவு 7:00 மணி.
சாமநத்தம், பெண்களுக்கான உரிமைகள் குறித்த கருத்தரங்கம், சிறப்புரை: வழக்கறிஞர் அமலா, காலை 9:30 மணி, பசுமை குறித்த விழிப்புணர்வு, சிறப்புரை: ஆனையூர் அரசு உயர்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஹரிபாபு, ஏற்பாடு: செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதியம் 2:00 மணி.
கோட்டையூர், உயர்கல்வியில் டிஜிட்டல் வழிகாட்டி, சிறப்புரை: சேது பொறியியல் கல்லுாரி உதவிப்பேராசிரியர் சிவசுப்பரமணி, ஏற்பாடு: கருமாத்துார் கிளாரட் மேல்நிலைப்பள்ளி, காலை 10:00 மணி.
ராஜாக்கூர், அரசு மருத்துவமனை பார்வை: பள்ளி செயலாளர் பொன்னம்பலம், காலை 9:30 மணி, எயிட்ஸ் விழிப்புணர்வு, சிறப்புரை: ஆசிரியர் ஆறுமுகக்கடவுள், ஏற்பாடு: எம்.ஏ.வி.எம்.எம்., மேல்நிலைப்பள்ளி, மாலை 3:00 மணி.
மகளிர் சுயஉதவிக்குழு கட்டடம், எல்.கே.டி., நகர், என் இந்தியா என் பெருமை, சிறப்புரை: நல்லாசிரியர் விருதுபெற்ற உதவிப்பேராசிரியர் ஜெயச்சந்திரன், காலை 10:30 மணி, பள்ளி வளாகம் துாய்மை செய்தல், ஏற்பாடு: சி.புளியங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி, மதியம் 3:30 மணி.
மணியஞ்சி, அலங்காநல்லுார், ஏற்பாடு: மதுரை மீனாட்சி மெட்ரிக் பள்ளி, காலை 9:30 மணி.
பொது 101வது பொதுக்குழுக் கூட்டம்: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் ஜெகதீசன், இன்றைய பொருளாதார நிலை குறித்து பேசுபவர்: பொருளாதார ஆலோசகர் சோம.வள்ளியப்பன், ஏற்பாடு: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மாலை 5:00 மணி.
நுகர்வோர் முப்பெரும் விழிப்புணர்வு விழா: எம்.வி.எம்., மருது மகால், சோழவந்தான், போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி துவங்கி வைப்பவர்கள்: எஸ்.பி., அரவிந்த், சப் கலெக்டர் உட்கர்ஷ்குமார், தலைமை: மாநில தலைவர் கர்ணன், முன்னிலை: தொழிலதிபர் மருதுபாண்டியன், ஏற்பாடு: தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையம், காலை 10:00 மணி.
ராகப்பிரியா சேம்பர் மியூசிக் கிளப் இசைக்கச்சேரி: ஓட்டல் பார்ச்சூன் பாண்டியன், மதுரை, பாட்டு - அர்ச்சனா, சாமன்வி, வயலின் - பிரித்வி பாஸ்கர், மிருதங்கம்: நொச்சூர் நாகராஜ், மாலை 6:00 மணி.
இன்றைய சூழலில் சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டிகள்: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:15 மணி
தேசிய ஹிந்தி இருவார பயிற்சி நிறைவு விழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: பொருளாளர் செந்தில்குமார், முன்னிலை: செயலாளர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மதியம் 12:00 மணி.
சட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, பேசுபவர்: வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், காலை 11:00 மணி.
விளையாட்டு 69வது தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமத்திற்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள்: மதுரை ரைபிள் கிளப், ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை, 14 வயது 17, 19 வயது மகளிர் பிரிவிற்கான துப்பாக்கி சுடுதல் தேர்வு போட்டிகள், காலை 7:00 மணி.
கண்காட்சி மான்சரோவர் ஆடைக் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.
நிரா விழாக்கால ஆடை விற்பனை கண்காட்சி: அர்பன் ஸ்பைஸ் கேலரி, கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.