ADDED : நவ 11, 2025 03:53 AM
கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.
பக்தி சொற்பொழிவு பெரியபுராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பொது மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை வழங்கக்கோரி முற்றுகை போராட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: தேசிய மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் தளம் அகில இந்திய செயல் தலைவர் நம்புராஜன், ஏற்பாடு: அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், காலை 10:00 மணி.
ஹிந்தி பேச்சு பயிற்சி சான்றிதழ் வகுப்பு: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்றுநர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.
மருத்துவம் மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: மாநகராட்சி துவக்க பள்ளி, சொக்கிகுளம், மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.
இலவச கண் பரிசோதனை முகாம்: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் ரோடு, மதுரை, முன்னிலை: சங்கத் தலைவர் ஜெகதீசன், துவக்கி வைப்பவர்: ராமச்சந்திரா கண் மருத்துவமனை டாக்டர் சீனிவாசன், காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை.
கண்காட்சி நீருக்கடியில் அக்வாரியம்: அம்மா திடல், வண்டியூர் டோல்கேட் அருகில், மதுரை, ஏற்பாடு: தி ஓஷன் அமைப்பு, மதியம் 2:00 முதல் இரவு 10:00 மணி வரை.
'காந்தி சில்ப் பஜார்' - அகில இந்திய கைவினைப் பொருட்களின் கண்காட்சி, விற்பனை: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: பெட்கிராட் நிறுவனம், கைவினைப் பொருட்களுக்கான மேம்பாட்டு இயக்ககம், காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.
பட்டுச் சேலைகள் கண்காட்சி, விற்பனை: திருப்புவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்க கிளைகள், 141, தவிட்டுச்சந்தை, மதுரை, 12, சேர்மன் துளசிராம் 2வது தெரு, மதுரை, ஏற்பாடு: திகோ சில்க்ஸ், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

