ADDED : ஆக 31, 2024 05:35 AM
கோயில்
கோயில் உற்ஸவம்: காளியம்மன் கோயில், பொன்மேனி, மதுரை, பொங்கல் வைத்தல், காலை 6:00 மணி, முளைப்பாரி எடுத்து ஆற்றில் கரைத்தல், மாலை 4:00 மணி.
பிரதோஷ பூஜை: ஆனந்தேஸ்வர விநாயகர் ஆஸ்திக சபா, யமுனா ரோடு, எல்லீஸ் நகர், மதுரை, மாலை 5:30 மணி.
சனி மகா பிரதோஷ பூஜை : செல்வ விநாயகர் கோயில், கஸ்ட்ம்ஸ் காலனி, மதுரை, மாலை 4:15 மணி.
மகா பிரதோஷ வழிபாடு: ஸ்ரீ மடம், 23, பெசன்ட்ரோடு, சொக்கிகுளம், மதுரை, சந்திரமெளலீஸ்வர சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், பூஜை, மாலை 5:00 மணி.
இரண்டாம் ஆண்டு வருடாபிஷேகம்: பூச்செடி கிணற்று ஜம்புலிங்கேஸ்வரர் கோயில், அனுப்பானடி ஊருணிக்கரை, மதுரை, காலை 9:00.
சர்ச் பெருவிழா: வேளாங்கண்ணி அன்னை சர்ச், அண்ணா நகர், மதுரை, திருப்பலி -- அண்ணாநகர் பாதிரியார் ஆரோன், காலை 11:30 மணி, பல்லோட்டின் அருட்தந்தையர்கள், மாலை 6:30 மணி.
பக்தி சொற்பொழிவு
ஸ்ரீமத் பகவத்கீதை: நிகழ்த்துபவர் -- நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
தாயுமானவர்: நிகழ்த்துபவர் -- சுந்தரக் கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
நாராயணீயம்: நிகழ்த்துபவர் -- சுப்புராமன், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.
ஸ்ரீமத் பாகவத சொற்பொழிவு: நிகழ்த்துபவர் -- சனத்குமார் பாகவதர், நாமத்வார், அய்யர்பங்களா, மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
பொது
பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா: சிருங்கேரி மகால், பைபாஸ் ரோடு, மதுரை, தலைமை: வழக்கறிஞர் கணபதி வரதசுப்பிரமணியன், முன்னிலை: மாவட்டத் தலைவர் ரங்கராஜன், பங்கேற்பு: மாநில தலைவர் கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன், ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம், மாலை 5:00.
இலவச செயற்கை கால் மூட்டு பொருத்துதல் சிறப்பு முகாம்: மங்கையர்க்கரசி மகளிர் கலை அறிவியல் கல்லுாரி, பரவை, ஏற்பாடு: கல்லுாரி, பகவான் மஹாவீர் விக்யாய் உதவிக் குழு, காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை.
பணியிடத்தில் பெண் தொழிலாளர்கள் கண்ணியத்துடன் பணிபுரியும் உரிமையை உறுதி செய்வதற்கான மாநிலத்தின் பங்கு குறித்த ஆலோசனை கூட்டம்: ஜஸ்டிஸ் வி.ஆர். கிருஷ்ண ஐயர் ஹால், கே.கே. நகர், மதுரை, ஏற்பாடு: சோக்கோ டிரஸ்ட், ஜஸ்டிஸ் சிவராஜ் வி. பாட்டீல் அமைப்பு, காலை 10:00 மணி.
மதுரை சங்கீத சபாவின் 7ம் ஆண்டு விழா: கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் கலையரங்கம், திருப்பரங்குன்றம், தலைமை: சந்திரசேகர பட்டர், மாலை 5:30 மணி.
ஆங்கில மொழித் திறன் மேம்பாட்டு பயற்சி: ஜாய் குழந்தைகள் இல்லம், நாகமலை, தலைமை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி ஆங்கிலத்துறை தலைவர் பாலமுருகன், பங்கேற்பு: முதல்வர் ராமமூர்த்தி, காலை 10:00 மணி.
17 -- 22 வயது ஆண்களுக்கு இலவச கபடி பயிற்சி: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி, உசிலம்பட்டி, பயிற்சி அளிப்பவர்: தலைவர் அலெக்ஸ் பாண்டியன், ஏற்பாடு: சதர்ன் ஸ்போர்ட்ஸ் அகாடமி, காலை 8:30 மணி முதல்.
ஏ.யு.டி. மற்றும் மூட்டா சார்பில் கல்லுாரி ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து மாநிலம் தழுவிய நீதி கேட்புக் கோரிக்கை பேரணி: ராஜா முத்தையா மன்றம் முதல் கலெக்டர் அலுவலகம் வரை, மதுரை, பங்கேற்பு: தலைவர் செந்தாமரைக்கண்ணன், மாலை 4:00 மணி.
பள்ளி, கல்லுாரி
முன்னாள் மாணவர் சங்க ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், தலைமை: முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் முரளி கிருஷ்ணன், பங்கேற்பு: கல்லுாரி செயலாளர் வேதானந்த, அத்யாத்மானந்த, சங்கத் துணைத் தலைவர் சத்ய நாராயணன், பொருளாளர் பட்டினத்தார், சங்க செயலாளர் சங்கர், காலை 9:45 மணி.
முன்னாள் மாணவியர் சங்க ஆண்டு விழா: சவுராஷ்டிரா பெண்கள் பள்ளி, அனுப் பானடி, மதுரை, தலைமை: சங்கத் தலைவர் ஜனரஞ்ஜனிபாய், சிறப்பு விருந்தினர்: தொழிலதிபர் விஷ்ணு பிரியா, காலை 10:00.
வக்புபோர்டு கல்லுாரி பி.காம்., 1989 - 92ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: ஓட்டல் பப்பீஸ், மதுரை, காலை 10:00 மணி.
வணிக நிர்வாகவியல் துறை பெற்றோர் ஆசிரியர் கூட்டம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர்: வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் செல்வமணி, காலை 9:00 மணி.
குரு உத்சவ் 4.0 2024 - ஆசிரியர் தின விழா: பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லுாரி, அரசனுார், தலைமை: கல்லுாரி தலைவர் மலேசியா பாண்டியன், சரஸ்வதி, முன்னிலை: நிர்வாக இயக்குநர்கள் சரவணன், வரதராஜன், பங்கேற்பு: முதல்வர் ராஜா, காலை 10:00 மணி.
கண்காட்சி
மதுரை பில்டு எக்ஸ்போ 2024 கட்டுமான பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, காலை 10:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.