தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/இன்றைய நிகழ்ச்சி // மே 14

இன்றைய நிகழ்ச்சி // மே 14

இன்றைய நிகழ்ச்சி // மே 14


ADDED : மே 14, 2024 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2024 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்

வைகாசி வசந்த உற்ஸவம்- 2ம் நாள்: முருகன் கோயில், சோலைமலை மண்டபம், அழகர்கோவில், ஷண்முகார்ச்சனை, காலை 11:00 மணி, மகா அபிஷேகம், சுவாமி புறப்பாடு, மகா தீபாராதனை, மதியம் 3:00 மணி முதல்.

வைகாசி வசந்த உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, பஞ்சமூர்த்திகளுடன் அம்மனும், சுவாமியும் புதுமண்டபத்தில் எழுந்தருளல், பக்தியுலாத்துதல், தீபாராதனை, சித்திரை வீதிகளில் உலா, மாலை 6:00 மணி.

வைகாசி பெருந்திருவிழா: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், மிருத்ஸங் கிரணம் அங்குரார்பணம் வாஸ்து சாந்தி கெருட பிரதிஷ்டை, மாலை 6:19 முதல் இரவு 8:00 மணிக்குள்.

32வது உற்ஸவ விழா: பத்ரக்காளியம்மன் கோயில், கிரிவல வீதி, திருப்பரங்குன்றம், திருவிளக்கு பூஜை, தலைமை: கார்த்திகேயன், கருணாகரன்,முன்னிலை: டாக்டர் புகழேந்தி பாண்டியன், துவக்கிவைப்பவர்: டாக்டர் நந்தினி பாண்டியன், ஏற்பாடு: திருப்பரங்குன்றம் வட்டார இந்து நாடார்கள் உறவின்முறை, மாலை 5:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - பார்வதியம்மாள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பொது

அன்றும் இன்றும் - கருத்தரங்கு: ஜே.சி.ரெசிடென்சி, சின்ன சொக்கிக்குளம், மதுரை, பேசுபவர்: தியாகராஜர் கல்லுாரி முன்னாள் முதல்வர் அருணகிரி, ஏற்பாடு: மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கம், இரவு 7:00 மணி.

உலக மியூசிய தினத்தை முன்னிட்டு நொண்டி விளையாட்டுப் போட்டி: காந்தி மியூசிய வளாகம், மதுரை, ஏற்பாடு: அரசு அருங்காட்சியகம், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கலைஞர் நுாலகம், மதுரை, மரம் அறிவோம் - பேசுபவர்: சிவராமன், ஏற்பாடு: பள்ளிக் கல்வித்துறை, பொது நுாலக இயக்கம், காலை 11:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us