ADDED : பிப் 20, 2025 05:40 AM
கோயில்
அனுஷ வைபவத்தை முன்னிட்டு காஞ்சி மஹா பெரியவரின் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்பாஞ்சலி: எஸ்.எம்.கே., திருமண மண்டபம், 12, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 6:00 மணி, குபேர சாய்பாபாவிற்கு ஆரத்தி, கூட்டுப் பாராயணம், மாலை 6:30 மணி.
பக்தி சொற்பொழிவு
தாயுமானவர் பாடல்கள்: நிகழ்த்துபவர் - உமாராணி, திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.
திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
ஆன்மிக சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - முரளி, வீரராகவ பெருமாள் கோயில், வண்டியூர், மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
தாய்மொழி நாள் விழா: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, சிறப்புரை: பார்க் பிளாசா குழும நிறுவனர் கண்ணன், தமிழாசிரியர் வெற்றிமுருகன், ஏற்பாடு: தமிழ்த்துறை, காலை 10:30 மணி.
உலக மானுடவியல் தினம் - கருத்தரங்கு: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: உளவியல் ஆலோசகர் ஆனந்தி, காலை 11:45 மணி.
பொது
தமிழ்க்கூடல்: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: சங்க இயக்குநர் அவ்வை அருள், சிறப்புரை: வழக்கறிஞர் வாஞ்சிநாதன், கவிஞர் துளிர், காலை 10:00 மணி.
தொழிலாளர், தொழிற்சங்க விரோத போக்கை கண்டித்து முற்றுகை போராட்டம்: மின்வாரிய தெற்கு கோட்ட அலுவலகம், சுப்பிரமணியபுரம், மதுரை, காலை 10:00 மணி.
மருத்துவம்
இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
கண்காட்சி
'ராஜஸ்தான் சில்க் எக்ஸ்போ' - காட்டன், டிசைனர், பாரம்பரிய ஆடைகளின் விற்பனை, கண்காட்சி: விஜய் மஹால், 44, கே.கே.நகர், மதுரை, காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை.

