/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தக்காளி விலை சரிவு: விவசாயிகள் கவலை
/
தக்காளி விலை சரிவு: விவசாயிகள் கவலை
ADDED : டிச 28, 2024 05:23 AM
பேரையூர் : பேரையூர் பகுதியில் தக்காளி விலை சரிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இப்பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை ரூ.100 வரை விற்பனையானது. இதையடுத்து பல்வேறு இடங்களில்தக்காளி சாகுபடி அதிகரித்து விலை குறைந்து வருகிறது. விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ ரூ.10க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
விவசாயிகள் கூறியதாவது: சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலைமிகவும் அதிகரித்து காணப்பட்டது. இதை அடுத்து நாங்கள் நடவில் ஈடுபட்டோம். தற்போது விளைச்சல் நன்றாக உள்ளது. கிலோ ரூ.10க்குகொள்முதல் செய்யப்படுவதால் பறிப்பு கூலிக்கு கூட கட்டுபடியாகவில்லை. உயரும் என எதிர்பார்த்து இருந்த நிலையில் கடுமையாக சரிந்துள்ளதுஎன்றனர்.

