தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/நாளை சைக்கிள் ரேஸ் போட்டி

நாளை சைக்கிள் ரேஸ் போட்டி

நாளை சைக்கிள் ரேஸ் போட்டி


UPDATED : நவ 13, 2026 12:00 AM

ADDED : நவ 12, 2026 08:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 12:00 AM ADDED : நவ 12, 2026 08:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சைக்கிள் ரேஸ் போட்டிகள் நாளை (நவ. 14) காலை 6:30 மணிக்கு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ., துாரம், 15 வயது, 17 வயதினருக்கு 20 கி.மீ., துாரம் 13 வயது மாணவிகளுக்கு 10 கி.மீ., துாரம், 15 வயது, 17 வயதினருக்கு 15 கி.மீ., துாரத்திற்கு சைக்கிள் ரேஸ் நடத்தப்படும். இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிளுக்கு மட்டுமே அனுமதி. கியர் சைக்கிள், ரேஸ் சைக்கிள் கொண்டு வரக்கூடாது. பள்ளித் தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்ற வயதுச்சான்றிதழ், ஆதார் கார்டு நகல், பள்ளி அடையாள அட்டையுடன் நாளை (நவ.14) காலை 6:00 மணிக்குள் ரேஸ்கோர்ஸ் வரவேண்டும். முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.5000, இரண்டாமிடத்திற்கு ரூ.3000, மூன்றாமிடத்திற்கு ரூ.2000, நான்கு முதல் பத்து இடங்களைப் பெறுபவர்களுக்கு தலா ரூ.250 வீதம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us