மதுரை: மதுரை கூடல்நகர் அசோக்நகர் முதல் தெரு வரசித்தி விநாயகர் கோயிலில் 38வது ஆண்டு கால பைரவாஷ்டமி விழா நாளை (நவ. 23) நடக்கிறது.
அதிகாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கி, 9:00 மணிக்கு ருத்திர ஜெபம், 10:00 மணிக்கு கால பைரவருக்கும், மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கும் அபிஷேகம் நடக்கிறது. காலை 11:00 மணிக்கு துலாபாரம், மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.
இதுகுறித்து பாஸ்கர வாத்தியார் கூறியதாவது: அரிசி, வெல்லம், வாழைப்பழம் கொண்ட துலாபார கட்டணம் ரூ. 351, மற்ற பொருட்களுக்கு ரூ. 900, கால பைரவருக்கு வடைமாலை சாத்த ரூ. 350 போன்றவற்றிற்கு முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு நவ. 25, டிச., 2, 9ல் சங்காபிஷேகம் நடத்த ரூ.2500. டிச.16 முதல் ஜன.14 வரை மார்கழி மாத அதிகாலை பூஜைக்கு ரூ. 500. விவரங்களுக்கு 98430 14721ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.