/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நாளை இயற்கை உணவு விழிப்புணர்வு சந்தை
/
நாளை இயற்கை உணவு விழிப்புணர்வு சந்தை
ADDED : ஜன 20, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கே.கே.நகர் ஆவின் பண்ணை அருகே போத்தீஸ் கோடவுனில் நாளை(ஜன.,21) இயற்கை உணவு சார்ந்த விழிப்புணர்வு சந்தை நடக்கிறது.
காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கும் இச்சந்தையில் அங்காடி, இயற்கை உணவு, பயிற்சி பட்டறை, கலை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு செய்துள்ளது.மேலும் மாடித்தோட்டம் பயிற்சி, உறியடி, பல்லாங்குழி போன்ற மரபுவிளையாட்டுகள், சிறுவர்களுக்கான விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.
விபரங்களுக்கு 89391 38207.