ADDED : டிச 11, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார் : மதுரை பொதும்பு கலியுக மெய்ய அய்யனார் சுவாமி எருதுகட்டு விழா செவ்வாய் சாட்டுதலுடன் நேற்று துவங்கியது. இரவு அம்மச்சியார் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். மாவிளக்கு மற்றும் வான வேடிக்கையுடன் புறப்பாடு நடந்தது. இன்று காலை வடம் திரித்தல், மாலை 4:00 மணிக்கு புரவி எடுப்பு விழா மற்றும் சுவாமி சேஷ வாகனத்தில் எழுந்தருளல், பொங்கல் பானை அழைப்பு நடக்கிறது.
நாளை மதியம் 12:30 மணிக்கு சீலைக்காரி அம்மன் சுவாமிக்கு அபிஷேக ஆராதனையை தொடர்ந்து மாடு வடம் போட்டு எருது கட்டு விழா நடக்கிறது. டிச.13 இரவு சுவாமி குதிரை வாகனத்தில் சங்கையா சுவாமி கோயில் எதிர்சேவை நடைபெறும். டிச.14 இரவு 9:00 மணிக்கு பூப்பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது.