நாளை கிருஷ்ண ஜென்மாஷ்டமி இஸ்கான் அமைப்பு நடத்துகிறது
நாளை கிருஷ்ண ஜென்மாஷ்டமி இஸ்கான் அமைப்பு நடத்துகிறது
ADDED : செப் 02, 2026 07:12 PM
மதுரை: மதுரை திருப்பாலை இஸ்கான் அமைப்பு சார்பில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா நாளை (செப்.4) நடக்கிறது.
இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியர் பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதரின் திருப்பணியின் அடிப்படையில் விழா நடக்கிறது. அதிகாலை 4:30 மணிக்கு மங்கள ஆரத்தி, சிறப்பு தரிசனத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. தொடர்ந்து ஹரிநாம சங்கீர்த்தனம், சிறப்பு ஆன்மிக உபன்யாசம், மஹாமந்திர ஜப யாகம், பிரசாதம் விநியோகம் நடக்கின்றன. நள்ளிரவு 12:00 மணிக்கு ஸ்ரீகிருஷ்ண ஜென்ம மகோத்ஸவம், சிறப்பு அபிஷேகம் நடக்கின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் இணைந்து ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை ஜபிக்கும் சிறப்பு ஜெப யாக நிகழ்வும் நடக்கிறது.
ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் ஜப யாகத்தில் பங்கேற்கும் பக்தர்களில் இருந்து 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. பக்தர்கள் விழாவில் சிரமமின்றி பங்கேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.உலக வாழ்வின் நலன்களுடன், உயர்ந்த கிருஷ்ண பக்தியையும் ஆன்மிக முன்னேற்றத்தையும் பெற குடும்பத்தினருடன் பக்தர்கள் பங்கேற்க வேண்டும் என இஸ்கான் திருப்பாலை நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
