தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 'டன்' கணக்கில் ரேஷன் அரிசி கடத்தல்

 'டன்' கணக்கில் ரேஷன் அரிசி கடத்தல்

 'டன்' கணக்கில் ரேஷன் அரிசி கடத்தல்


ADDED : நவ 30, 2025 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 04:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாடக்குளம் ரேஷன் கடையில் இருந்து அரிசி காரில் கடத்தப்படுவதை அறிந்த பொதுமக்கள், கண்காணிக்க வேண்டிய உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரும், வட்ட வழங்கல் துறை அதிகாரிகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என கேள்வி எழுப்பினர்.

மாடக்குளத்தில் பசுமலை நகர கூட்டுறவு ரேஷன் கடை உள்ளது. நேற்றுமுன்தினம் மதியத்திற்கு மேல் ஆம்னி காரில் லோடுமேன்களுடன் வந்த ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் அரிசி மூடைகளை 'டன்' கணக்கில் கடத்திக்கொண்டு சென்றார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அரிசி கடத்தலில் ஈடுபட்டவர், 6 மாதங்களுக்கு முன் இதே பகுதி ரேஷன் கடையில் கடத்தலில் ஈடுபட்டு பிடிபட்டவர் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us