ADDED : ஜன 04, 2026 05:26 AM
மதுரை: தமிழக சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் சுற்றுலா விழா ஜன.14ல் மதுரை மாவட்டம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சத்திரப்பட்டியில் நடைபெறுகிறது. அன்று காலை 8:00 மணிக்கு மதுரை சுற்றுலாத்துறை அலுவலகத்திலிருந்து உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிறப்பு பஸ் மூலம் சத்திரப்பட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
அங்கு தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படும். மாட்டுவண்டியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவர். பரதம், கிராமிய கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் இடம்பெறும். ஜன.17 ல் அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டுவை பார்வையிட சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுவர்.
இரு நாட்கள் விழாவில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெயர், பாஸ்போர்ட் நகல் விபரங்களுடன் மேலவெளி வீதியில் உள்ள மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலகத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம். 91769 95868ல் தொடர்பு கொள்ளலாம்.
இணையதளத்தை (touristofficemadurai@gmail.com) பயன்படுத்தலாம் என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்தார்.

