/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை தமுக்கத்தில் துவங்கியது வர்த்தக கண்காட்சி பார்வையாளர்களுக்கு தினமும் பரிசு
/
மதுரை தமுக்கத்தில் துவங்கியது வர்த்தக கண்காட்சி பார்வையாளர்களுக்கு தினமும் பரிசு
மதுரை தமுக்கத்தில் துவங்கியது வர்த்தக கண்காட்சி பார்வையாளர்களுக்கு தினமும் பரிசு
மதுரை தமுக்கத்தில் துவங்கியது வர்த்தக கண்காட்சி பார்வையாளர்களுக்கு தினமும் பரிசு
ADDED : டிச 23, 2024 05:21 AM

மதுரை: மதுரை தமுக்கத்தில் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில் நான்கு நாள் வர்த்தக கண்காட்சி நேற்று (டிச. 22) துவங்கியது.
மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் திறந்து வைத்தார். சங்கத் தலைவர் வேல்சங்கர், கவுன்சிலர் முருகன், மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி, கண்காட்சி தலைவர் மாதவன், ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாசம், துணைத்தலைவர் வினோத்கண்ணா, திருமுருகன், சங்க துணைத்தலைவர் ஜெயகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
150க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் மின்னணு சாதனங்கள், ஆடை, ஆபரணங்கள், கட்டுமான பொருட்கள், ரியல் எஸ்டேட் நிறுவன ஸ்டால்கள், உடல் ஆரோக்கிய 'பிட்னஸ்' ஸ்டால்கள், சூரிய ஒளி மின்சார ஸ்டால்கள், நவீன மருத்துவ முறைகள் குறித்து வடமலையான் மருத்துவமனையின் பிரத்யேக ஸ்டால் இடம்பெற்றுள்ளன. 60 க்கும் மேற்பட்ட 'புட் கோர்ட்'களில் சைவ, அசைவ உணவுகள், ஐஸ்கிரீம் வகைகள், இனிப்பு, கார வகைகள், செக்கு எண்ணெய், குளிர்பானங்கள், சிறுதானிய உணவு வகைகள் உள்ளிட்ட பலவும் இடம்பெற்றுள்ளன.
புதிதாக விநியோக தொழில் துவங்க உள்ளவர்கள், கலந்துரையாடி விநியோக உரிமை பெற்றுக் கொள்ளவும், புதிய வணிக வாய்ப்பு பெறவும் 95வது ஸ்டால் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. குறைந்த செலவில், எளிய முறையில் தேனி வளர்ப்பு, உணவுப் பொருள் பேக்கிங் இயந்திரங்கள் குறித்து நேரடி விளக்கம் பெறலாம்.
பார்வையாளர்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள மொபைல் போன்கள், வீட்டு உபயோக பொருட்கள் என பரிசு பொருட்கள் குலுக்கல் முறையில் தினமும் வழங்கப்பட உள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தில் சிறப்பு பரிசாக இருவருக்கு ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள ஆன்ட்ராய்டு டேப்லட், பம்பர் பரிசு ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள டூவீலர் ஒருவருக்கும் வழங்கப்பட உள்ளன.
டிச. 25 வரை தினமும் காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.