ADDED : டிச 31, 2024 04:52 AM
மேலுார்: மேலுாரில் சி.ஐ.டி.யு., தொழிற்சங்க பேரவை கூட்டம் நடந்தது. தலைவர் மணவாளன் தலைமையில் நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
தலைவராக மணவாளன், செயலாளர் சேகர், பொருளாளர் பிரசாத் மற்றும் துணை நிர்வாகிகள் 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் மேலுாரில் புதிய பஸ் ஸ்டாண்டை திறக்க வேண்டும். ரூ.7.87 லட்சத்தில் புதிதாக கட்டிய தினசரி காய்கறி மார்க்கெட்டை முழுமையாக செயல்பட நடைபாதை கடைகளை ஒருங்கிணைக்க வேண்டும்.
ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயம் செய்த சம்பளத்தை முதல் வாரத்தில் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் அரவிந்தன், துணைத் தலைவர் வழக்கறிஞர் ஆஞ்சி, தாலுகா செயலாளர் தனசேகரன், விவசாய சங்க தாலுகா தலைவர் அடக்கி வீரணன் கலந்து கொண்டனர். நிர்வாகி ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.