ADDED : டிச 12, 2024 05:33 AM

மதுரை: வணிக கட்டடங்களுக்கான 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார். செயலாளர் அழகேசன் வரவேற்றார். மாநில கூடுதல் செயலாளர் பெரிஸ் மகேந்திரவேல், துணைத்தலைவர்கள் பாண்டியன், டேனியல் தங்கராஜ், இணைச் செயலாளர் சுரேஷ்பாபு, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் கலந்து கொண்டனர். பொருளாளர் லட்சுமிகாந்தன் நன்றி கூறினார். கடைகளின் வாடகை மீதான 18 சதவீத வரிவிதிப்பை மத்திய அரசு திரும்பப் பெறுவது, மாநில அரசின் ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி விதிப்பை திரும்பப் பெறுவது, வணிக உரிமக்கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வை ரத்து செய்வது, மாநில முழுவதும் ஒரே சீரான குப்பை வரி விதிப்பை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணகுமார், வெங்கடேசன், ஆறுமுகசாமி, பரிமளநாதன், கிருஷ்ணசாமி, சங்கரேஸ்வரன், பாண்டி, ராஜாராம்நாத், துரைபாண்டி, அங்குசாமி, செல்வக்குமார், ராஜேந்திரன், இளங்கோ, சிராஜூதீன் ஒருங்கிணைத்தனர்.
