மதுரை: மதுரை தானம் அறக்கட்டளையின் கல்வி நிலையம் சார்பில் மேலக்கால் அருகே டி.மலைப்பட்டியில் பாரம்பரிய திருவிழா நடந்தது. திருவேடகம் விவேகானந்தா கல்லுாரி, பாத்திமா, வெள்ளைச்சாமி நாடார், தியாகராஜர், மங்கையர்க்கரசி கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
சவுமி வரவேற்றார். நிர்வாக இயக்குனர் வாசிமலை தலைமை வகித்தார். இன்டாக்ட் இயக்குநர் அரவிந்த் சுக்லா பாரம்பரிய நடை பயணங்களை விளக்கினார்.
புள்ளியியல் நிபுணர் வேதாச்சலம் கூறுகையில், ''நம் பாரம்பரியத்தை இளைய தலைமுறையினருக்கு விழாக்கள் மூலம் தெரிவிக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன் துவரிமான் ஆற்றுப்படுகையில் கற்கள் கிடைத்துள்ளன.
சங்க இலக்கியங்களில் தென்கரை, தேனுார், கொடிமங்கலம் கிராமங்கள் குறித்த செய்திகள் கிடைத்துள்ளன'' என்றார். பேராசிரியர்கள் பாஸ்கர் தங்கராஜ், சைரா பானு, ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் பேசினர்.