ADDED : அக் 08, 2025 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுார் சூரக்குண்டு கிராமத்தில் நடந்த புரட்டாசி திருவிழாவில் பக்தர்கள் கிடா வெட்டி பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இங்குள்ள சின்னடைக்கி, பெரிய அடக்கி மற்றும் ஆண்டி அரசன் மகன் கோயில் திருவிழா நேற்று நடந்தது. மந்தையில் கூடிய மக்கள் சுவாமி சிலைகளை முன்னே கொண்டு செல்ல பெண்கள் பொங்கல் வைக்கும் பூஜை பொருட்களை 2 கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு சுவாமி பாடல்பாடியும், குலவையிட்டும் சுமந்து சென்றனர். மழைபெய்து விவசாயம் செழிக்கவும், எல்லா வளமும் கிடைக்க வேண்டியும் பொங்கல் வைக்கப்பட்டது.