/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாலமேடு வாரச்சந்தையால் பாதிக்கும் போக்குவரத்து
/
பாலமேடு வாரச்சந்தையால் பாதிக்கும் போக்குவரத்து
ADDED : டிச 03, 2024 05:57 AM

பாலமேடு: பாலமேட்டில் சனிக்கிழமை தோறும் வாரச் சந்தை கூடுகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வேன், ஆட்டோக்களில் வரும் வியாபாரிகள் காலை முதலே காய்கறிகள் உள்ளிட்ட கடைகளை அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.
பேரூராட்சி அலுவலகம் அருகே உழவர் சந்தை கடைகள் இருந்தும் பாலமேடு பஸ் ஸ்டாண்ட் மற்றும் அலங்காநல்லுார் ரோட்டை ஆக்கிரமித்து இருபுறமும் கடைகள் அமைக்கப்படுகின்றன.
இப்பகுதி கிராமங்களில் இருந்து காய்கறி வாங்க வருவோரும் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். மாலையில் கூட்டம் அலைமோதுவதால் இவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
பஸ்டாண்டுக்குள் கடைகள், வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பஸ்களை வெளியே நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. சாலை ஆக்கிரமிப்பு வாரசந்தை கடைகளால் ஏற்படும் நெரிசலை குறைக்க போலீசார் ,பேரூராட்சி நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.