ADDED : ஆக 26, 2026 04:19 AM

அ நிறம் | அளவு
மதுரை: போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்படி, போக்குவரத்து துணை கமிஷனர் வனிதா மேற்பார்வையில் பெரியார் பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுதல், நேர மேலாண்மை குறித்து விளக்கினர். பஸ் ஸ்டாண்டுக்குள் பயணிகளை ஏற்றும்போது நடந்துகொள்வது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மதுரை தெற்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கமணி, தெற்குவாசல் இன்ஸ்பெக்டர் பஞ்சவர்ணம், போக்குவரத்து கழக மேலாளர் அசோக் பங்கேற்றனர். அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பாதுகாப்பு பயண உறுதிமொழி எடுத்தனர்.
