/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை பைபாஸ் ரோடு பொன்மேனி சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்; மாநாட்டுக்கு பின் உதயநிதி எதிர்பார்ப்பு
/
மதுரை பைபாஸ் ரோடு பொன்மேனி சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்; மாநாட்டுக்கு பின் உதயநிதி எதிர்பார்ப்பு
மதுரை பைபாஸ் ரோடு பொன்மேனி சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்; மாநாட்டுக்கு பின் உதயநிதி எதிர்பார்ப்பு
மதுரை பைபாஸ் ரோடு பொன்மேனி சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்; மாநாட்டுக்கு பின் உதயநிதி எதிர்பார்ப்பு
ADDED : டிச 16, 2025 06:59 AM

மதுரை: மதுரை பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல், விபத்தை குறைக்க கடந்தாண்டு குரு தியேட்டர் சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து 'யூ டர்ன்' முறையை போலீசார் ஏற்படுத்தினர். இது நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, பொன்மேனி சந்திப்பிலும் சோதனை அடிப்படையில் 'யூ டர்ன்' முறையை போலீசார் இன்று(டிச.16) அறிமுகப்படுத்துகின்றனர்.
இதன்படி காளவாசல் சந்திப்பில் இருந்து பழங்காநத்தம் நோக்கி வாகனங்கள் நேராக வழக்கம் போல் செல்லலாம். காளவாசல் சந்திப்பில் இருந்து பொன்மேனி பகுதிக்குள் செல்லக் கூடிய வாகனங்கள், பொன்மேனி சந்திப்பில் இருந்து 100 மீட்டர் தொலைவில் வலதுபுறம் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள 'U' வளைவில் திரும்பி பொன்மேனி சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி செல்லலாம். பழங்காநத்தம் சந்திப்பில் இருந்து காளவாசல் நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் நேராக செல்லலாம். பழங்காநத்தம் சந்திப்பில் இருந்து எஸ்.எஸ். காலனி பகுதிக்குள் செல்லக்கூடிய வாகனங்கள் பொன்மேனி சந்திப்பில் இருந்து 60 மீட்டர் தொலைவில் வலதுபுறம் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள 'U' வளைவில் திரும்பி பொன்மேனி சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி செல்லலாம்.
பொன்மேனி பகுதியில் இருந்து காளவாசல் நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் வழக்கம்போல் இடதுபுறம் திரும்பி நேராக செல்லலாம். பொன்மேனி பகுதியில் இருந்து பழங்காநத்தம் நோக்கி செல்லக் கூடிய வாகனங்கள் பொன்மேனி சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி 60 மீட்டர் தொலைவில் வலதுபுறம் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள 'U' வளைவில் திரும்பி பழங்காநத்தம் நோக்கி செல்லலாம்.
எஸ்.எஸ். காலனி பகுதியில் இருந்து பழங்காநத்தம் நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் வழக்கம்போல் இடதுபுறம் திரும்பி நேராக செல்லலாம். எஸ்.எஸ். காலனி பகுதியில் இருந்து காளவாசல் நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் பொன்மேனி சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி 100 மீட்டர் தொலைவில் வலதுபுறம் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள 'U' வளைவில் திரும்பி காளவாசல் நோக்கி நேராக செல்லலாம்.
இந்த போக்குவரத்து மாற்றம் குறித்து ட்ரோன் கேமரா மூலம் போலீசார் ஆய்வு செய்து தேவைப்படும் பட்சத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

