தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கோரிப்பாளையம் மேம்பால பணிக்காக நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

கோரிப்பாளையம் மேம்பால பணிக்காக நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

கோரிப்பாளையம் மேம்பால பணிக்காக நாளை முதல் போக்குவரத்து மாற்றம்


ADDED : ஜூலை 09, 2025 07:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2025 07:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை கோரிப்பாளையம் அருகில் புதிய மேம்பால துாண்கள் அமைக்கும் பணிகளுக்காக நாளை முதல் தேனி ஆனந்தம் முதல் குமரன் சாலை சந்திப்பு வரையிலான ரோடு அடைக்கப்படுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வாகன போக்குவரத்து மாற்றம்


l குமரன் ரோடு வைகை வடகரை சந்திப்பு முதல் ஆழ்வார்புரம் இறக்கம் வரை போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

l தத்தனேரி மெயின் ரோட்டிலிருந்து விரகனுார் ரோடுக்கு செல்லும் கனரக, சரக்கு வாகனங்கள் பாத்திமா கல்லுாரியிலிருந்து இடதுபுறம், கூடல்புதுார் பாலம், ஆனையூர், அய்யர்பங்களா, மூன்று மாவடி, 120 அடி ரோடு வழியாக செல்ல வேண்டும்.

l குருவிக்காரன் சாலையிலிருந்து வைகை வடகரை, தத்தனேரி மெயின் ரோடு வழியாக திண்டுக்கல் ரோட்டிற்கு செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் அனைத்தும் வைகை தென்கரை ரோடு வழியாக எம்.ஜி.ஆர்., பாலத்தில் வலதுபுறம் திரும்பி வைகை வடகரை ரோடு வழியாக செல்லலாம்.

l ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து வைகை வடகரை வழியாக மாட்டுத்தாவணி செல்லக்கூடிய நகர, புறநகர் பஸ்கள் அனைத்தும் தத்தனேரி மேம்பாலம், கபடி ரவுண்டானா பாலம் ஸ்டேஷன் ரோடு வழியாக செல்ல வேண்டும்.

l மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், அழகர் கோவில் ரோட்டிலிருந்து தமுக்கம் வழியாக ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட், பாத்திமா கல்லுாரி சந்திப்பு செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் கே. கே. நகர் ஆர்ச், பெரியார் சிலை சந்திப்பு, தமுக்கம், கோரிப்பாளையம், ஏ.வி., பாலம் வழியாக அண்ணா சிலை சென்று செல்ல வேண்டும்.

l அண்ணா பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆரப்பாளையம் செல்லக்கூடிய பஸ்கள் பனகல் ரோடு சிவசண்முகம்பிள்ளை தெரு வைகை வடகரை வழியாக ஓபுளா படித்துறை பாலம் சென்று வைகை தென்கரை வழியாக செல்லவேண்டும்.

l ஆவின் சந்திப்பு வழியாக ஆரப்பாளையம் செல்லக்கூடிய பஸ்கள் குருவிக்காரன் சாலை ரவுண்டானா, காமராஜர் ரோடு, முனிச்சாலை வழியாக செல்ல வேண்டும்.

l அழகர்கோவில் ரோட்டிலிருந்து செல்லக்கூடிய பொதுமக்களின் இலகுரக, இருசக்கர வாகனங்கள் ஆழ்வார்புரம் இறக்கம் வைகை வடகரை, ஓபுளா பாலம், மீனாட்சி கல்லுாரி ரோடு, ஏ.வி., பாலம் வழிகளை பயன்படுத்தி நகரின் எந்த பகுதிக்கும் செல்லலாம்.

l யானைக்கல் சந்திப்பிலிருந்து வைகை தென்கரை ரோட்டிலிருந்து செல்லும் வழி தற்காலிகமாக அடைக்கப்படுகிறது. இவ்வழியாக செல்லும் வாகனங்கள் சிம்மக்கல் பஸ் ஸ்டாப் இடதுப் புறம் திரும்பி திருமலைராயர் படித்துறை ரோடு வழி செல்லலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us