/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோரிப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்
/
கோரிப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜன 11, 2026 05:59 AM
மதுரை: மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு அருகில் புது மேம்பாலம் கட்டுமானப் பணி நடக்கிறது.
கோரிப்பாளையம் சந்திப்பிலிருந்து ஏ.வி.பாலத்திற்கு செல்ல சூப்பர் டெய்லர் சந்திப்பிலிருந்து மீனாட்சி பெண்கள் கல்லுாரி வழியாக தற்காலிக சாலை அமைத்து பயன்பாட்டில் உள்ளது. கோரிப்பாளையம் சந்திப்பிலிருந்து ஏ.வி.பாலம் செல்லும் வாகனங்கள் தற்போது இச்சாலை வழியாக சென்று வருகின்றன.
தற்போது அச்சாலையில் புதிதாக கட்டியுள்ள பாலத்தை இணைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் கோரிப்பாளையம் சந்திப்பிலிருந்து மீனாட்சி பெண்கள் கல்லுாரி வழியாக ஏ.வி.பாலம் செல்லும் வாகனங்கள், கோரிப்பாளையம் சந்திப்பிலிருந்து இடதுபுறம் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள நிரந்தர சாலை வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

