/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிக்காக மதுரையில் போக்குவரத்து மாற்றம்
/
முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிக்காக மதுரையில் போக்குவரத்து மாற்றம்
முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிக்காக மதுரையில் போக்குவரத்து மாற்றம்
முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிக்காக மதுரையில் போக்குவரத்து மாற்றம்
ADDED : டிச 07, 2025 08:58 AM
மதுரை: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் இன்று(டிச.,7) மேலமடை பாலம் திறப்பு, உத்தங்குடியில் நலத்திட்ட உதவி வழங்கும் விழாக்களில் பங்கேற்கிறார். இதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள் கப்பலுார் பாலத்திலிருந்தும், அருப்புக்கோட்டை ரிங் ரோடு சந்திப்பிலிருந்தும் மண்டேலா நகர் மற்றும் மேலுார் வழியாக திருச்சி செல்ல இன்று காலை 6:00 மணி முதல் தடை செய்யப்பட்டுள்ளது. மேலுார் வழியாக திருச்சி, சென்னை செல்ல வேண்டிய சரக்கு வாகனங்கள் கப்பலுார் சந்திப்பிலிருந்து தேனி ரோடு சந்திப்பு, சமயநல்லுார், வாடிப்பட்டி சந்திப்பு வழியாக திண்டுக்கல், மணப்பாறை வழியாக செல்லவேண்டும். அருப்புக்கோட்டையிலிருந்து மண்டேலா நகர் வழியாக செல்லக்கூடிய சரக்கு வாகனங்களும் அருப்புக்கோட்டை ரிங்ரோடு சந்திப்பிலிருந்து கப்பலுார் பாலம் சென்று தேனி ரோடு சந்திப்பு, சமயநல்லுார், வாடிப்பட்டி சந்திப்பு வழியாக செல்லவேண்டும்.
திருச்சியிலிருந்து மேலுார், ரிங்ரோடு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மேலுார் நான்கு வழிச்சாலை சந்திப்பிலிருந்து அலங்காநல்லுார் வழியாக தனிச்சியம் பிரிவு சந்திப்பு சென்று இடது புறம் திரும்பி சமயநல்லுார், துவரிமான், கப்பலுார் வழியாக செல்லவேண்டும்.
மேலுார் வழியாக சிவகங்கை, ராமநாதபுரம் செல்லக்கூடிய சரக்கு வாகனங்கள் மேலுார் நான்கு வழிச்சாலை சந்திப்பிலிருந்து பூவந்தி, திருப்புவனம் வழியாக செல்லலாம்.
பொதுப்போக்குவரத்து மேலுார் நான்கு வழிச்சாலை விவசாய கல்லுாரி சந்திப்பிலிருந்து ஒத்தக்கடை வழியாக மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிற்கும், - பாண்டிகோயில் சந்திப்பிலிருந்து மாட்டுத்தாவணி வரையும் செல்ல எந்த ஒரு வாகனத்திற்கும் அனுமதி இல்லை.
அதேபோல் மாட்டுத்தாவணியில் இருந்து ஒத்தக்கடை வழியாகவும், பாண்டிகோவில் ரோடு வழியாக விரகனுார் ரிங்ரோட்டிற்கும், சிவகங்கை ரிங் ரோடு சந்திப்பு வழியாக மாட்டுத்தாவணிக்கும் செல்லவும் அனுமதி இல்லை.
மேலுார் நான்கு வழிச்சாலை சந்திப்பிலிருந்து கிடாரிப்பட்டி, வள்ளாலபட்டி, அழகர்கோவில், கடச்சனேந்தல், சர்வேயர்காலனி சந்திப்பு, 120 அடி ரோடு வழியாக மாட்டுத்தாவணிக்கு செல்லலாம். மாட்டுத்தாவணியில் இருந்து மேலுார் செல்ல வேண்டிய வாகனங்கள் மேற்கூறிய வழியை பயன்படுத்த வேண்டும்.
மாட்டுத்தாவணியில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட வாகனங்கள் பழமார்க்கெட் சந்திப்பு, மேலமடை சந்திப்பு, அண்ணாநகர், வைகை சர்வீஸ் ரோடு, ரிங் ரோடு வழியாக செல்ல வேண்டும். கப்பலுார், மண்டேலா நகர், பாண்டி கோயில், விரகனுார் ரிங் ரோடு வழியாக மாட்டுத்தாவணிக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் நகருக்குள் வந்து செல்ல வேண்டும்.
விழாவிற்கு வரும் வாகனங்களுக்கான வழித்தடம் கள்ளிக்குடி, சேடபட்டி, கல்லுப்பட்டி, திருமங்கலம் பகுதி வாகனங்கள் கப்பலுார் பாலம், ரிங் ரோடு வழியாக வரவேண்டும். செல்லம்பட்டி, உசிலம்பட்டி பகுதி வாகனங்கள் நாகமலை புதுக்கோட்டை பைபாஸ் ரோடு, கப்பலுார் பாலம், ரிங் ரோடு வழியாக வர வேண்டும். வாடிப்பட்டி பகுதி வாகனங்கள் தனிச்சியம், அலங்காநல்லுார், ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், சர்வேயர் காலனி சந்திப்பு வழியாக உத்தங்குடி செல்ல வேண்டும். விவசாயக்கல் லுாரி வளாகத்தில் தற்காலிக 'பார்க்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளது.
கொட்டாம்பட்டி, மேலுார் பகுதி வாகனங்கள் ஒத்தக்கடை வழியாக உத்தங்குடிக்கு வர வேண்டும். சிவகங்கை, ராமநாதபுரம் சாலைகளிலிருந்து வரும் வாகனங்கள் பாண்டிகோயில் வழியாக செல்லவேண்டும்.

