தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ திருப்பரங்குன்றத்தில் போக்குவரத்து மாற்றம்

 திருப்பரங்குன்றத்தில் போக்குவரத்து மாற்றம்

 திருப்பரங்குன்றத்தில் போக்குவரத்து மாற்றம்


ADDED : ஏப் 03, 2026 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 11:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்;திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம், தேரோட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவதை முன்னிட்டு ஏப்ரல் 4,5 இரு நாட்கள் தற்காலிக போக்குவரத்து மாற்றுங்கள் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

திருநகரிலிருந்து மதுரை நகருக்குள் செல்லும் வாகனங்கள் கிரிவல பாதை, திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் செல்வதற்கு அனுமதி இல்லை. பை பாஸ் ரோடு மூட்டா தோட்டம் சென்று மதுரை செல்ல வேண்டும்.

மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் மேம்பாலம் வழியாக திருநகர் செல்வதற்கு அனுமதி இல்லை. இவ்வாகனங்கள் மூட்டா தோட்டத்திலிருந்து பைபாஸ் ரோடு வழியாக திருநகர் செல்ல வேண்டும்.

அவனியாபுரத்திலிருந்து திருப்பரங்குன்றம் சாலை வழியாக நிலையூர், திருநகர் செல்லக்கூடிய பொது போக்குவரத்து இலகு ரக வாகனங்கள் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் வலது புறம் திரும்பி தியாகராஜர் பெறியியல் கல்லுாரி சாலை வழியாக ஜி.எஸ்.டி.ரோட்டில் செல்ல வேண்டும்.

மேற்படி சாலை வழியாக வரக்கூடிய கனரக வாகனங்கள் அவனியாபுரம்

முத்துப்பட்டி திருப்பரங்குன்றம் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அழகப்பன் நகர் ரயில்வே கேட் வழியாக செல்ல வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us