ADDED : பிப் 04, 2024 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உத்தப்பநாயக்கனூர் போலீசார் மொண்டிக்குண்டு ரோட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் 10 கிலோ கஞ்சா இருந்தது. கடத்தி வந்த உத்தப்பநாயக்கனூர் ரமேஷ்பாண்டி 40, நல்லதம்பி 42 இருவரை கைது செய்தனர். எ.இராமநாதபுரத்தைச் சேர்ந்த கல்யாணி தப்பி ஓடினார். கார், ரூ. 47 ஆயிரம், அலைபேசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.