தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பராமரிப்பு பணிகளால் ரயில்கள் சேவையில் மாற்றம்

 பராமரிப்பு பணிகளால் ரயில்கள் சேவையில் மாற்றம்

 பராமரிப்பு பணிகளால் ரயில்கள் சேவையில் மாற்றம்


ADDED : மே 01, 2026 02:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2026 02:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் தண்டவாள பராமரிப்பு பணிகளால் மே முழுவதும் ஜூன் முதல் வாரத்தில் கீழ்க்காணும் ரயில்கள் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரத்து * மே 6, 13, 20, 27ல் ஈரோடு - செங்கோட்டை (16845), மே 7, 14, 21, 28ல் செங்கோட்டை - ஈரோடு (16846)ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

பகுதி ரத்து * மே 2 முதல் 31 வரை (செவ்வாய், புதன் தவிர்த்து), ஜூன் 1 முதல் 6 வரை (ஜூன் 2 தவிர்த்து) ஈரோடு - செங்கோட்டை (16845), மே 3 முதல் 31 வரை (புதன், வியாழன் தவிர்த்து), ஜூன் 1 முதல் 7 வரை (ஜூன் 3 தவிர்த்து) செங்கோட்டை - ஈரோடு (16846)ஆகிய ரயில்கள் செங்கோட்டை - திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகின்றன.

* மே 5, 12, 19, 21, 22, 26ல் மதுரை - ராமேஸ்வரம் (56711), ராமேஸ்வரம் - மதுரை (56714) ஆகிய ரயில்கள் மண்டபம் - ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகின்றன.

மாற்றுப்பாதை * மே 1(இன்று) முதல் ஜூன் 7 வரை (மே 20 தவிர்த்து) செங்கோட்டை - மயிலாடுதுறை (16848), மே 3 முதல் ஜூன் 7 வரை (ஞாயிறு, வியாழன் தோறும்) நாகர்கோவில் - மும்பை எல்.டி.டி., (16352), மே 2 முதல் ஜூன் 6 வரை (சனி தோறும்) கன்னியாகுமரி - ஹவுரா (12666), மே 1 முதல் ஜூன் 5 வரை (வெள்ளி தோறும்) கன்னியாகுமரி - ஐதராபாத் (17070), மே 28ல் மதுரை - பிகானர் (22631) ஆகிய ரயில்கள் மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும்.

* மே 1 முதல் ஜூன் 6 வரை (மே 3, 19 தவிர்த்து) குருவாயூர் - சென்னை எழும்பூர் (16128), மே 6 முதல் ஜூன் 3 வரை (புதன் தோறும்) எர்ணாகுளம் - வேளாங்கண்ணி (16363),மே 6 முதல் ஜூன் 3 வரை (மே 20 தவிர்த்து) துாத்துக்குடி - கச்சிகுடா (17616) ஆகிய ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும்.

* மே 4, 5, 7, 8, 11, 12, 13, 14ல் செங்கோட்டை - மதுரை (56772),மே 4, 5, 8, 12, 13ல் கோவை - நாகர்கோவில் (16322), மே 8, 13ல் திருச்செந்துார் - பாலக்காடு (16732), மே 7, 11, 14ல் பாலக்காடு - திருச்செந்துார் (16731), மதுரை - குருவாயூர் (16327), மே 14ல் நாகர்கோவில் - கோவை (16321) ஆகிய ரயில்கள் மதுரை, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும்.

* மே 30ல் நாகர்கோவில் - கச்சிகுடா ரயில் (16354) திருச்சி செல்லாமல் திண்டுக்கல், கரூர் வழியாக செல்லும்.

தாமதம் * மே 30ல் மதுரை - சென்னை எழும்பூர் 'தேஜஸ்' ரயில் (22672), அரை மணி நேரம் தாமதமாக மதுரையில் இருந்து மாலை 4:00 மணிக்கு புறப்படும்.

சிறப்பு ரயில் * மே 3 முதல் 31 வரை (புதன், வியாழன் தவிர்த்து), ஜூன் 1 முதல் 7 வரை (ஜூன் 3 தவிர்த்து), செங்கோட்டையில் இருந்து அதிகாலை 5:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், தென்காசி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், திருமங்கலம் வழியாக காலை 9:30 மணிக்கு மதுரை வரும்.

*மே 2 முதல் 31 வரை (செவ்வாய், புதன் தவிர்த்து), ஜூன் 1 முதல் 6 வரை (ஜூன் 2 தவிர்த்து), மதுரையில் இருந்து மாலை 6:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், இரவு 10:30 மணிக்கு செங்கோட்டை செல்லும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us