sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரயில் கால அட்டவணை இன்று முதல் மாற்றம்

ரயில் கால அட்டவணை இன்று முதல் மாற்றம்

ரயில் கால அட்டவணை இன்று முதல் மாற்றம்


ADDED : ஜன 01, 2025 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2025 05:34 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குப் பின், சிறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்ட குறைந்த துார ரயில்கள், சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வந்தன. தற்போது இவை அனைத்தும் வழக்கமான சேவை ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன.

பல்வேறு ரயில்களின் புறப்படும் நேரம் ஜன. 1 முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

மதுரை --- திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் (16344) மதுரையில் இருந்து மாலை 4:10 மணிக்கு பதிலாக மாலை 3:.45 மணிக்கும், தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் மதுரை -- சென்னை மும்முறை சேவை விரைவு ரயில் (22624) மதுரையில் இருந்து இரவு 8:50 மணிக்கு பதிலாக இரவு 8:45 மணிக்கும் புறப்படும்.

மதுரை -- புனலுார் விரைவு ரயில் (16729) மதுரையில் இருந்து இரவு 11:25 மணிக்கு பதிலாக இரவு 11.20 மணிக்கு புறப்படும். திருநெல்வேலி - -செங்கோட்டை ரயில் (56741) திருநெல்வேலியில் இருந்து காலை 7:00 மணிக்கு பதிலாக காலை 6:50 மணிக்கும், திருநெல்வேலி -- நாகர்கோவில் ரயில் (56708) திருநெல்வேலியில் இருந்து காலை 7:10 மணிக்கு பதிலாக காலை 7:05 மணிக்கும், திருநெல்வேலி -- திருச்செந்துார் ரயில் (56727) திருநெல்வேலியில் இருந்து காலை 7:25 மணிக்கு பதிலாக காலை 7:15 மணிக்கும், திருநெல்வேலி - - செங்கோட்டை ரயில் (56743) திருநெல்வேலியில் இருந்து மதியம் 1:50 மணிக்கு பதிலாக மதியம் 1:45 மணிக்கும் புறப்படும்.

செங்கோட்டை -- மயிலாடுதுறை ரயில் (16848) செங்கோட்டையில் இருந்து காலை 7:05 மணிக்கு பதிலாக காலை 6:55 மணிக்கும், செங்கோட்டை - - திருநெல்வேலி ரயில் (56738) செங்கோட்டையில் இருந்து மதியம் 2:35 மணிக்கு பதிலாக மதியம் 2:05 மணிக்கும் புறப்படும்.

துாத்துக்குடி -- திருநெல்வேலி ரயில் (56721) துாத்துக்குடியில் இருந்து மாலை 6:25 மணிக்கு பதிலாக மாலை 6:15 மணிக்கு புறப்படும். திருச்செந்துார் - திருநெல்வேலி ரயில் (56728) திருச்செந்துாரில் இருந்து காலை 7:20 மணிக்கு பதிலாக காலை 7:10 மணிக்கு புறப்படும். மணியாச்சி -- துாத்துக்குடி ரயில் (56726) மணியாச்சியில் இருந்து மதியம் 3:10 மணிக்கு பதிலாக 3:00 மணிக்கும், மணியாச்சி - திருச்செந்துார் ரயில் (56731) மணியாச்சியில் இருந்து காலை 11:05 மணிக்கு பதிலாக காலை 11:00 மணிக்கு புறப்படும்.

மணியாச்சி -- துாத்துக்குடி ரயில் (56724) மணியாச்சியில் இருந்து இரவு 8:25 மணிக்கு பதிலாக இரவு 8:15 மணிக்கு புறப்படும். காரைக்குடி -- திருச்சி ரயில் (56816) காரைக்குடியில் இருந்து மதியம் 3:30 மணிக்கு பதிலாக 3:15 மணிக்கு புறப்படும்.

வழக்கமான நேரத்திற்கு முன்னதாக புறப்படும் ரயில்களின் விபரம் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. சில ரயில்கள் வழக்கமான நேரத்திற்கு பிறகு புறப்படும் படியாகவும் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

பயண நேரம் குறைப்பு


தாதர் -- திருநெல்வேலி ரயில் (11021), சென்னை -- திருநெல்வேலி நெல்லை ரயில் (12631), நாகர்கோவில் - -சென்னை ரயில் (12668), சென்னை சென்ட்ரல்- - நாகர்கோவில் ரயில் (12689), சென்னை - -குருவாயூர் ரயில் (16127), கோயம்புத்துார் - -ராமேஸ்வரம் ரயில் (16618), ஈரோடு-- செங்கோட்டை ரயில் (16845), மயிலாடுதுறை-- செங்கோட்டை ரயில் (16847), பெரோஸ்பூர் - -ராமேஸ்வரம் ரயில் (20498), திருச்செந்துார் - -சென்னை செந்துார் ரயில் (20606), ராமேஸ்வரம் - -புவனேஸ்வர் ரயில் (20895), நாகர்கோவில் -தாம்பரம் ரயில் (22658) ஆகியவற்றின் பயண நேரம் 30 முதல் 40 நிமிடங்கள் வரை குறைக்கப்பட்டுள்ளன.

57 விரைவு ரயில்களின் பயண நேரம் 5 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை குறைக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us