ADDED : பிப் 05, 2026 06:50 AM
மதுரை: ஏப். 6 முதல் மதுரைக்கு வந்து செல்லும் எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் உள்ளிட்ட ரயில்களின் நேரம் மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம் - ராமேஸ்வரம் 'அமிர்தா' ரயில் (16343): திருவனந்தபுரத்தில் இருந்து வழக்கம்போல் இரவு 8:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12:15 மணிக்கு ராமேஸ்வரம் செல்கிறது. காலை 8:05க்கு திண்டுக்கல், 9:20க்கு மதுரை, 10:03க்கு மானாமதுரை, 10:23க்கு பரமக்குடி, 10:48க்கு ரா மநாதபுரம் வந்து செல்லும்.
திருச்சி - ராமேஸ்வரம் ரயில் (16849) : திருச்சியில் இருந்து வழக்கம்போல் காலை 7:05 மணிக்கு புறப்பட்டு மதியம் 12:35 மணிக்கு ராமேஸ்வரம் செல்கிறது. காலை 9:40க்கு மானாமதுரை, 10:08க்கு பரமக்குடி, 10:38க்கு ராமநாதபுரம், 10:54க்கு உச்சிப்புளி, 11:09க்கு மண்டபம், 11:19க்கு பாம்பன் வந்து செல்லும்.
திண்டுக்கல் - மதுரை பாசஞ்சர் (56717) : திண்டுக்கல்லில் இருந்து காலை 7:50 மணிக்கு புறப்பட்டு காலை 9:10 மணிக்கு மதுரை வருகிறது. காலை 8:01க்கு அம்பாத்துரை, 8:10க்கு கொடை ரோடு, 8:20க்கு வாடிப்பட்டி, 8:29க்கு சோழவந்தான், 8:39க்கு சமயநல்லுார், 8:49க்கு கூடல்நகர் வந்து செல்லும்.
ராமேஸ்வரம் - மதுரை பாசஞ்சர் (56714) : ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11:30 மணிக்கு புறப்பட்டு மதியம் 3:05 மணிக்கு மதுரை வருகிறது.
காலை 11:43க்கு பாம்பன், 11:53க்கு மண்டபம், மதியம் 12:00 மணிக்கு மண்டபம் கேம்ப், 12:10க்கு உச்சிப்புளி, 12:20க்கு வாலாந்தரவை, 12:33க்கு ராமநாதபுரம், 12:46க்கு சத்திரக்குடி, 1:00 மணிக்கு பரமக்குடி, 1:13க்கு சூடியூர், 1:40க்கு மானாமதுரை, 1:52க்கு ராஜகம்பீரம், 2:02க்கு திருப்பாச்சேத்தி, 2:12க்கு திருப்புவனம், 2:23க்கு சிலைமான், 2:35க்கு மதுரை கிழக்கு வந்து செல்லும்.
