ADDED : ஜன 09, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி : மேலவளவில் கொட்டாம்பட்டி வட்டார வேளாண்மை முகமை திட்டத்தின் கீழ் நெல்லுக்குபின் பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. உதவி இயக்குநர் சுபாசாந்தி தலைமை வகித்தார்.
மதுரை வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை பேராசிரியர் சுரேஷ், பயிர்களில் பூச்சிகள், கொசு தாக்குதல்,கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பேசினார்.
துணை வேளாண் அலுவலர் தனசேகரன், தொழில்நுட்ப மேலாளர் ராஜதுரை, உதவி அலுவலர்கள் பாலசுப்ரமணியன், சரவணகுமார், உதவி மேலாளர்கள், உழவர் உற்பத்தியாளர் குழுவினர்கள் கலந்து கொண்டனர்.