தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்


ADDED : ஆக 20, 2026 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 01:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி, மதுரை கைப்பந்து கழகம் சார்பில் உடற் கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் மாணவர்கள், சர்வதேச பயிற்சி பட்டறை கல்லுாரியில் நடந்தது.

முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தனர். அமெரிக்கன், அருளானந்தர், வெள்ளைச்சாமி நாடார், காமராஜர் பல்கலை, நாகரத்தினம் அங்காளம்மன் உட்பட பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த 196 உடற்கல்வி மாணவ ஆசிரியர்கள், ஆசிரியர்கள், இயக்குனர்கள் பங்கேற்றனர்.

துபாய் ஜெம்ஸ் மாடர்ன் அகாடமி பள்ளி ஆசிரியர் ஸ்டாலின் சத்யா அரபு நாடுகளில் உடற்கல்வி வேலை வாய்ப்பு குறித்தும், துபாய் மரியன்னை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மோசஸ் ஆன்லைன் கைப்பந்து நுணுக்கங்கள் குறித்தும் பேசினர்.

மதுரை மாவட்ட கைப்பந்து கழக தீபன் ராஜ், அகில இந்திய கைப்பந்து கழக விதிகள், புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள விதிகளை விளக்கினார்.

சர்வதேச கைப்பந்து வீராங்கனை ஜெயப்பிரியா, விளையாட்டு அனுபவங்களையும், சேது பொறியியல் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் சிவ விக்னேஷ் நடுவர்களின் சைகை விளக்கங்கள் குறித்தும் பேசினர். பேராசிரியர் மாலினி ஒருங்கிணைத்தார்.

கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் யுவராஜ் ஏற்பாடுகள் செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us