ADDED : ஜூன் 24, 2026 12:18 AM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுாரில் பாரதிய கிசான் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது. மாநில இளைஞரணி தலைவர் பாலசுப்பிரமணி வரவேற்றார். சங்கத்தின் அமைப்புகளை பற்றி தலைவர் பார்த்தசாரதி விளக்கினார்.
இயற்கை விவசாய அணி பொறுப்பாளர் ராஜேந்திரபாபு தலைமை வகித்தார். இயற்கை வழி வேளாண்மை பயன்கள், இயற்கை உரங்கள் தயாரிப்பு, பூச்சி மேலாண்மை, மண்வள மேம்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. துணைத் தலைவர் அசோகன், மாநில செயலாளர் சீமான், நிர்வாகிகள் பிரபு, ராஜேந்திரபாபு, பாலசுப்பிரமணி, பொறுப்பாளர்கள் புவனேஸ்வரி கலந்து கொண்டனர். மகளிரணி நிர்வாகி சுபா நன்றி கூறினார்.
