UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 08:06 PM
அ நிறம் | அளவு
கொட்டாம்பட்டி: சூரப்பட்டியில் கொட்டாம்பட்டி வட்டார வேளாண் துறை சார்பில் தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் கீழ் நிலக்கடலை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண்மை உதவி இயக்குனர் வளர்மதி, மதுரை வேளாண்மை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி சுரேஷ், துணை வேளாண்மை அலுவலர் ரகுராமன் உள்ளிட்டோர் வேளாண் திட்டங்கள், நிலக்கடலை சாகுபடி, பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் மேலாண்மை முறைகள், நிலக்கடலைக்கு தேவையான நுண்ணுாட்டம் மற்றும் சத்துக்கள் குறித்து பயிற்சி அளித்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜதுரை, உதவி தொழில்நுட்ப மேலாளர் கண்ணன், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
