நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம், மதுரை பெட்கிராட் நிறுவனம் சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மற்றும் டெலிகாலிங் பயிற்சி துவக்க விழா நடந்தது. பொதுச் செயலாளர் அங்குசாமி வரவேற்றார். நிர்வாக இயக்குநர் சுப்புராமன் தலைமை வகித்தார். தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள் ரூபி முன்னிலை வகித்தனர். திறன் மேம்பாட்டு கழக மாவட்ட உதவி இயக்குநர் செந்தில்குமார் குத்துவிளக்கேற்றினார்.
தேவகி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் நாகேந்திரன், சரஸ்வதி நாராயணன் கல்லுாரி முன்னாள் முதல்வர் கண்ணன் பயிற்சி பெறும் மாணவர்களை வாழ்த்தினர். அலுவலர் பொன்ராம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சியாளர்கள் கீர்த்திராஜ், ஷீபா ஏற்பாடுகளை செய்தனர்.

