ADDED : நவ 30, 2026 03:54 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கோமதிபுரம் தென்றல் நகர் குடியிருப்போர் சங்க அலுவலகத்தில் ஆக்டிவ் ஹார்ட் பவுண்டேஷன் சார்பில் துடிப்பற்ற இதயத்தை இயங்க வைக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
மகளிர் சங்கத் தலைவி வள்ளி மயில் வரவேற்றார். மாரடைப்புக்கும், இதயத் துடிப்பு முடக்கத்திற்கும் இடையேயான வித்தியாசம், இதயம் சார்ந்த மருத்துவ பயன்பாடு, இதயத் துடிப்பு முடக்கத்தால் பாதிக்கப்பட்ட நபரை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் விவரித்தனர். துடிப்பற்ற இதயத்தை இயங்க வைக்கும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. ஆலோசகர் பழனிக்குமார் நன்றி கூறினார். சங்கத் தலைவர் ராகவன், செயலாளர் ரகுபதி, பொருளாளர் காசி, இணைச் செயலாளர் திரவியம், உட்பட பலர் பங்கேற்றனர்.
