UPDATED : நவ 23, 2026 07:51 PM
ADDED : நவ 23, 2026 07:49 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி நடந்தது.
நிலையத் தலைவர் சுரேஷ் பேசியதாவது: தென்னையில் சிகப்பு கூன் வண்டு, காண்ட மிருக வண்டுகளை கவர்ந்து அழிக்கக் கூடிய வாளிப்பொறி, சுருள் ஈயைக் கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டும் பொறி உள்ளது. காண்டாமிருக வண்டுகள் உற்பத்தியாகும் எருக்குழிகளில் மெட்டாரைசியம் அனிசோபிலியே பூஞ்சாணத்தை எருவுடன் கலந்து இடுவதன் மூலம் வண்டின் முட்டை, புழு, கூட்டுப்புழுக்களை அழிக்கமுடியும். சிகப்பு கூன் வண்டு தாக்கி விழுந்த மரத்தை அகற்றி தீயிட்டால் அதிலுள்ள புழுக்கள், கூட்டுப்புழுக்கள், வண்டுகளை அழிக்கலாம் என்றார். தென்னையில் உரநிர்வாகம், ரகத் தேர்வு குறித்து உதவி பேராசிரியர் அருள் அரசு பேசினார்.
