/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி
/
தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி
ADDED : ஜன 03, 2024 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வரவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கான 10 தொகுதிகளில் அடங்கிய 60 சட்டசபை தொகுதிகளில் 120 உதவித் தேர்தல்நடத்தும் அலுவலர்கள் பணிபுரிவர். இவர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று மதுரையில் நடந்தது. கலெக்டர் சங்கீதா துவக்கி வைத்தார்.
டி.ஆர்.ஓ., சக்திவேல், இந்திய தேர்தல் ஆணையம் நியமித்தள்ள பயிற்றுனர்கள் மதன்மோகன், சரிதா உடனி ருந்தனர்.
இதில் தொடர்புடைய உதவி கலெக்டர்கள், ஆர்.டி.ஓ.,க்கள், துணை கலெக் டர்கள், தாசில்தார்கள் பங்கேற்றனர். இப்பயிற்சி ஜன.6 வரை நடக்க உள்ளது.