ADDED : செப் 08, 2026 04:42 PM
அ நிறம் | அளவு
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி வேதியியல் ஆராய்ச்சி மற்றும் முதுகலை துறை சார்பில் நிலையான ஆற்றலுக்கு பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் எரிபொருள் கலன் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது. முதல்வர் சந்திரன் துவக்கி வைத்தார்.
துணை முதல்வர் கணேசன் முன்னிலை வைகித்தார். வேதியல் துறை தலைவர் குபேந்திரன் அறிமுக உரையாற்றினார். காரைக்குடி அழகப்பா பல்கலை தொழில்நுட்பத் துறை நிறுவன ஒத்துழைப்பு பிரிவு இயக்குனர் மகாலிங்கம், பேராசிரியர் நாகசுப்பிரமணியன் பேசினர். பேராசிரியர் முனியப்பன் ஒருங்கிணைத்தார்.
