ADDED : மார் 18, 2026 04:49 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கோட்டத்தில் வாடிப்பட்டி -- கொடை ரோடு -- அம்பாத்துரை இடையே தண்டவாள பராமரிப்பு பணியால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்ட சில ரயில்கள் இன்றும், நாளையும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (மார்ச் 18) புறப்படும் ஈரோடு -- செங்கோட்டை, நாளை புறப்படும் செங்கோட்டை - - ஈரோடு ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்.
இன்று புறப்படும் குருவாயூர் -- சென்னை எழும்பூர், நாளை புறப்படும் செங்கோட்டை - - மயிலாடுதுறை, நாகர்கோவில் மும்பை சி.எஸ்.எம்.டி., ஆகிய ரயில்கள் வழக்கமான பாதையில் இயங்கும்.
