/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விரும்பிய இடங்களுக்கு 520 போலீசாருக்கு இடமாறுதல்
/
விரும்பிய இடங்களுக்கு 520 போலீசாருக்கு இடமாறுதல்
ADDED : அக் 01, 2024 05:19 AM
மதுரை: மதுரை மாவட்டத்தில் 520 போலீசாருக்கு விரும்பிய இடங்களுக்கு இடமாற்றம் அளித்த எஸ்.பி., அரவிந்த் உத்தரவிட்டார்.
மாவட்டத்தில் 48 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் பெரும்பாலான போலீசார் பல கி.மீ., துாரம் கடந்து வரவேண்டியுள்ளது. இதனால் போதிய ஓய்வு இல்லாமல் சிரமப்பட்டனர். இதனால் மனஅழுத்தத்திற்கு ஆளாக ஆரம்பித்தனர். இது எஸ்.பி., அரவிந்த் கவனத்திற்கு சென்றது.
இதைதொடர்ந்து சிறப்பு எஸ்.ஐ.,க்கள், போலீசாரிடம் பணியாற்ற விரும்பும் ஸ்டேஷன் குறித்து கேட்கப்பட்டது. அவர்கள் அளித்த விருப்ப மனு அடிப்படையில் நேற்று 520 பேருக்கு விரும்பிய ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் அளித்து எஸ்.பி., உத்தரவிட்டார். குறிப்பிட்ட ஸ்டேஷனில் போதிய ஆட்கள் இருந்ததால் சிலருக்கு அருகில் உள்ள ஸ்டேஷன்களுக்கு இடமாறுதல் வழங்கினார்.
போலீசார் கூறுகையில், ''விரும்பிய வேலையை ஆர்வமுடன் செய்வது போல், விரும்பிய இடங்களில் பணியாற்றும் போது இன்னும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம். குடும்பத்துடனும் போதிய நேரம் செலவிடமுடியும். அலைச்சல் குறையும். மனஅழுத்தமும் நீங்கும்'' என்றனர்.