ADDED : ஆக 18, 2026 06:31 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பிரேம் கிஷோர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. முல்லை பெரியாறு விவசாய சங்கத் தலைவர் முருகன், விவசாயிகள் கிருஷ்ணன், கதிரேசன், பாண்டி, ரவி ஆகியோர் பேசினர்.
விவசாய நிலம் அளவீட்டிற்கு பணம் கட்டி 6 மாதமாகியும் அளவீடு செய்யவில்லை. கடந்தாண்டு நீர்வளத் துறைக்கு ஒதுக்கிய நிதி குறித்து தகவல் எதுவும் இல்லை. அதனால் இந்தாண்டு, பாசன கால்வாய் பராமரிப்புக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து வெளிப்படை தன்மை வேண்டும். மாயாண்டி கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். நீர்வளத் துறையில் விவசாயிகளுக்கு அதிக குறைபாடுகள் உள்ளதால் தனி கூட்டம் நடத்த வேண்டும் என்றனர்.
