/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போக்குவரத்து ஓய்வூதியரே இதப்படிங்க மொதல்ல...
/
போக்குவரத்து ஓய்வூதியரே இதப்படிங்க மொதல்ல...
ADDED : டிச 31, 2024 04:52 AM
மதுரை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று, தன் விருப்ப ஓய்வு பெற்று, மருத்துவ தகுதியின்மையால் விடுவிக்கப்பட்டு ஓய்வூதியம் பெறுவோர், இறப்பின் காரணமாக (வாரிசு) குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் வாழ்நிலையை மெய்ப்பிக்க வேண்டும்.
இதற்காக 2025 ஜன.2ம் தேதி முதல் மார்ச் 20க்குள் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மண்டலங்களைச் சேர்ந்தவர்கள் மதுரை தலைமையகம், திண்டுக்கல் கிளை 1, தேனி கிளை, விருதுநகர் தலைமையகம், ஸ்ரீவில்லிப்புத்துார் கிளை ஆகிய ஏதாவது ஒன்றில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
அதேபோல வெளிநாடு செல்ல கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) வைத்திருப்போர் அதன் நகலை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்படுகிறது. மேலும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் அந்தந்தப் பகுதியில் உள்ள இ சேவை மையத்தில் டி.என்.எஸ்., 103 பென்ஷனர்ஸ் லைப் சர்டிபிகேட் போர்ட்டலில் 1.1.2025 முதல் 31.3.2025 வரையான காலத்தில் பதிவு செய்யலாம் என மேலாண்மை இயக்குனர் சிங்காரவேலு தெரிவித்துள்ளார்.