ADDED : பிப் 20, 2024 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் கருவூலக் கணக்குத்துறை சார்பில் ஓய்வூதியம் மற்றும் சேமநலநிதி முன்மொழிவை ஆன்லைனில் அனுப்புவது தொடர்பான பயிற்சி முகாம் நடந்தது.
கருவூலம் மற்றும் சம்பள கணக்குத்துறை கூடுதல் இயக்குநர் நிரூபராணி தலைமை வகித்தார். மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த சம்பளம் பெறும் கணக்கு அலுவலர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு சென்னை டேட்டா சென்டர் அலுவலர்கள் பயிற்சி அளித்தனர். கருவூலத்துறையின் கட்டுப்பாட்டு அலுவலர் தாயுமானவர், மண்டல இயக்குநர் கணேசன், மாவட்ட கருவூல அலுவலர் சாந்தி, கணக்கு அலுவலர் கஸ்துாரி பங்கேற்றனர்.

