ADDED : நவ 28, 2024 05:43 AM

சோழவந்தான்: சோழவந்தான் - தென்கரை வைகை ஆற்றுப் பாலத்தில் வளரும் மரங்களை முளையிலேயே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தப் பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் பல்வேறு கிராமங்களுக்கு சென்று வருகின்றன. இதன் வெளிப்புற சுவர்களில் இருபுறமும், பல இடங்களில் செடிகள், அரசு, புங்கை உள்ளிட்ட மரங்கள் வளர்ந்துள்ளன. அதில் சில நான்கு அடி உயர மரங்களாக மாறி பாலத்தின் பக்கவாட்டு சுவருக்கு மேலாக வளர்ந்து நிற்கின்றன.
இவை மரங்களாக வளர்ந்து விட்டால் பாலம் பாதிக்கும். அந்நிலையில் அவற்றை அகற்றுவது அதிக சிரமம் ஏற்படுத்தும். பாலத்தின் நடைபாதை ஓரங்களில் மணல், வாகனங்களில் இருந்து விழும் தேங்காய் மட்டைகள் சேர்ந்துள்ளன. இதனால் டூவீலரில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பாலத்தில் வளர்ந்துள்ள மரம், கிடக்கும் மணல், மட்டைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.