ADDED : ஜூன் 25, 2026 03:04 AM

மதுரை: மதுரையில் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆர்.இ.யூ.,) சார்பில், தொழிற்சங்க உரிமையை பறிப்பதாகக் கூறி, தெற்கு ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டப் பொருளாளர் சரவணன் தலைமை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர் கார்த்திக் சங்கிலி முன்னிலை வகித்தார். கோட்டத் தலைவர் ராஜூ, உதவிக் கோட்டத் தலைவர் ஜெயராஜசேகர், செயலாளர் சிவக்குமார், துணைப் பொதுச் செயலாளர்கள் திருமலை அய்யப்பன், மாதவன், சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி, அனைத்திந்திய கார்டு கவுன்சில் அமைப்புச் செயலாளர் கோபி, ஓடும் தொழிலாளர் சங்க உதவிக் கோட்டத் தலைவர் ராகவன், ஓய்வூதியர் சங்க (டி.ஆர்.பி.யூ.,) கோட்டச் செயலாளர் சங்கரநாராயணன் உள்ளிட்டோர் பேசினர். டி.ஆர்.இ.யூ., உதவிச் செயலாளர் நிஜாமுதீன் நன்றி கூறினார்.
தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் வெற்றிபெற்ற டி.ஆர்.இ.யூ.,வுக்கும் சமமான கிளைகள் ஒதுக்க வேண்டும். தொழிலாளர்களின் குறைகளை கேட்டு, நிர்வாகத்திடம் முறையிட்டு தீர்வுகாண தனி அமைப்பு ஏற்படுத்த வேண்டும். காலியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 8வது ஊதியக்குழு அமலாகும் வரை அனைத்து தொழிலாளர்களுக்கும் 30 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
