sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 டி.ஆர்.இ.யூ., சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம்

/

 டி.ஆர்.இ.யூ., சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம்

 டி.ஆர்.இ.யூ., சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம்

 டி.ஆர்.இ.யூ., சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 12, 2026 05:56 AM

Google News

ADDED : பிப் 12, 2026 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மத்திய அரசின் 4 தொழிலாளர் திருத்த சட்டங்களை எதிர்த்து, பல்வேறுதொழிற்சங்கங்கள் சார்பில் இன்று (பிப். 12) நடக்கும் வேலை நிறுத்தத்தை ஆதரித்து, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் முன்பு தட்சிண ரயில்வே பணியாளர் சங்கத்தினர் (டி.ஆர்.இ.யூ.,) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோட்டப் பொருளாளர் சரவணன் தலைமை வகித்தார். ஓபன் லைன் உதவிச் செயலாளர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தார். தலைவர் ராஜூ, செயலாளர் சிவக்குமார், துணைப் பொதுச் செயலாளர் திருமலை அய்யப்பன், சி.ஐ.டி.யூ., செயலாளர் லெனின், ஓடும் தொழிலாளர் சங்க செயலாளர் ஜீவா, ஓய்வூதியர் சங்க செயலாளர் சங்கரநாராயணன், கார்டு கவுன்சில் அமைப்பு செயலாளர் மருதுபாண்டி பேசினர்.

நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து பிரிவுகளிலும் 8 மணி நேர வேலையை உறுதிப்படுத்த வேண்டும். ரயில்வேக்கு மீண்டும் தனி பட்ஜெட்தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டன. ஓபன்லைன் உதவிச் செயலாளர் பாலச்சந்திரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us