தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பழங்குடியினர் மேம்பாட்டு கருத்தரங்கு

பழங்குடியினர் மேம்பாட்டு கருத்தரங்கு

பழங்குடியினர் மேம்பாட்டு கருத்தரங்கு


ADDED : அக் 07, 2025 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2025 04:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: வனத்துறை காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப் பன்மை பாதுகாப்பு பசுமையாக்கு தல் திட்டத்தின் கீழ், பழங்குடியினரின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான பயிற்சி, கருத்தரங்கு மதுரையில் நடந்தது.

தானம் மக்கள் கல்வி நிலைய ஒருங்கிணைப் பாளர் ஜேம்ஸ் சாமுவேல் வரவேற்றார். வனத்தை ஒட்டிய கிராம சுற்றுச் சூழல் மேம்பாட்டு குழு உறுப்பினர்கள், வனத்துறை வனச்சரகர்கள், வனவர்கள், வனக்காவலர்கள் பங்கேற்றனர்.

உயிர்ப் பன்மை திட்ட இயக்குநர் பிரசாந்த் பேசுகையில் ''வனத்துறை அதிகாரிகளுக்கும் கிராம சூழல் மேம்பாட்டு குழு உறுப்பினர்களுக்கும் இடையேயான நல் லிணக்கம் ஏற்பட வேண்டும். வனப் பாது காப்பில் சூழல் மேம்பாட்டு குழுவின் பங்களிப்பை பற்றி புரிந்து கொள்ள வேண்டும்'' என்றார்.

மாவட்ட வன அலுவலர் ரேவதி ராமன் முன்னிலை வகித்தார். பத்மஸ்ரீ விருதுபெற்ற சின்னப்பிள்ளை, தானம் கல்வி நிலைய துணை இயக்குனர் தியாக ராஜன், அணித் தலைவர் சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us