ADDED : ஏப் 24, 2026 06:46 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் 58. ராமநாதபுரம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு டி.எஸ்.பி.,யான இவர், திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம் பகுதியில் நேற்றுமுன்தினம் தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இவர் 1996ல் எஸ்.ஐ.,யாக போலீஸ் பணியில் சேர்ந்தவர்.
அவரது உடலுக்கு தென்மண்டல ஐ.ஜி., விஜயேந்திரபிதாரி, கமிஷனர் அபிஷேக் தீக்சித், டி.ஐ.ஜி.,க்கள் அபினவ்குமார், போதைப்பொருள் தடுப்புப்பிரிவு டி.ஐ.ஜி., மூர்த்தி, எஸ்.பி., மதிவாணன் அஞ்சலி செலுத்தினர். 21 குண்டுகள் முழங்க போலீசார் இறுதி மரியாதை செலுத்தினர்.
